twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து..புது பொலிவுடன் எச்.டி.யில் வெளியாகும் 'சிரித்து வாழ வேண்டும்’

    |

    எம் ஜி ஆர் இரு வேடங்களில் நடித்த முக்கியமான படங்களில் 'சிரித்து வாழ வேண்டும்' படம் ஒன்று. தற்போது டிஜிட்டல் மாற்றம் செய்யப்பட்டு எச்டியில் சிறப்பாக வர உள்ளது.

    இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவும், மற்றொரு வேடத்தில் இஸ்லாமியராகவும் வருவார்.

    இந்தப்படம் அமிதாப் நடித்த என்ற சஞ்சீர் என்கிற இந்தி படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும். இப்படம் டிஜிட்டலில் வர உள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

    கோலிவுட்டில் 13 ஆண்டுகள்.. சூர்யா 42 குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு! கோலிவுட்டில் 13 ஆண்டுகள்.. சூர்யா 42 குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு!

    அமிதாப் நடித்த புகழ்பெற்ற இந்திப்படத்தின் தழுவல்..ஒரு வேடத்தை இரு வேடமாக்கிய எம்ஜிஆர்

    அமிதாப் நடித்த புகழ்பெற்ற இந்திப்படத்தின் தழுவல்..ஒரு வேடத்தை இரு வேடமாக்கிய எம்ஜிஆர்

    எம்ஜிஆர் திமுகவை விட்டு பிரிந்து அதிமுகவை தொடங்கிய அடுத்த ஆண்டில் வெளியான படம் 'சிரித்து வாழ வேண்டும்' இது அமிதாப்பச்சன் நடித்த ஹிந்தி படமான சஞ்சீர் என்கிற படத்தின் தழுவல் படமாகும். இந்தியில் அமிதாப் பச்சன், பிரான் இருவரும் நண்பர்களாக வருவார்கள். அமிதாப் போலீஸ் அதிகாரி வேடத்திலும், பிரான் இஸ்லாமியராக நடித்திருப்பார். ஆனால் தமிழில் எம்ஜிஆர் இரண்டு வேடங்களிலும் அவரே நடித்திருப்பார். இரண்டு வேடங்களிலும் எம்ஜிஆர் அசத்தியிருப்பார். அதிலும் இஸ்லாமியர் வேடம் என்றால் எம்ஜிஆருக்கு கைவந்த கலை. மலைக்கள்ளன் படத்திலேயே கலக்கியிருப்பார்.

    இரட்டைவேட எம்ஜிஆர்..காதல் மோதல், சுவாரஸ்யம்

    இரட்டைவேட எம்ஜிஆர்..காதல் மோதல், சுவாரஸ்யம்

    போலீஸ் அதிகாரியாக, நேர்மையான அதிகாரியாக வரும் எம்ஜிஆர் ஒரு கொள்ளைக்கூட்ட லாரியை மடக்க முயல அந்த லாரி மோதி பள்ளி குழந்தைகள் பலியாகும், அதன் சாட்சியான லதாவுக்கு பிரச்சினை வரும்போது எம்ஜிஆர் காப்பாற்றுவார். பின்னர் தன்னுடன் தங்க வைப்பார். அப்போது அவர்களுக்குள் காதல் மலரும். இதில் இஸ்லாமியரான எம்ஜிஆருக்கும், போலீஸ் அதிகாரி எம்ஜிஆருக்கும் முதலில் மோதல் வந்து பின்னர் நட்பாக மாறும். போலீஸ் அதிகாரி உயிரை ஒருதடவை அவர் காப்பாற்றுவார்.

    அடடா எத்தனை அற்புதமான பாடல்கள்

    அடடா எத்தனை அற்புதமான பாடல்கள்

    லஞ்சம் வாங்கியதாக போலீஸ் அதிகாரி எம்ஜிஆரை சிக்க வைப்பார்கள். இதையெல்லாம் இஸ்லாமிய எம்ஜிஆர் உதவியுடன் முறியடிப்பார் போலீஸ் அதிகாரி எம்ஜிஆர். படத்தில் இஸ்லாமிய இளைஞராக வரும் எம்ஜிஆர் பாடும் "ஒன்றே சொல்வான், நன்றே செய்வான் அவனே அப்துல் ரஹ்மானாம்" என்கிற பாடல் மிகப்பிரபலம். "உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்", "பொன்மனச் செம்மலை புண்பட வைத்தது யாரோ" "கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்" என்கிற பாடல்கள் ரசிக்கத்தூண்டும்படி இருக்கும்.

    எம்ஜிஆர் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து

    எம்ஜிஆர் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து

    எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் எம்ஜிஆரின் பல படங்கள் டிஜிட்டல் மயமாகிறது. ஆயிரத்தில் ஒருவன், நான் ஏன் பிறந்தேன் உட்பட பல படங்கள் எச்டி தரத்தில் கண்ணுக்கு விருந்தாய் மாறியுள்ளது. இந்நிலையில் சிரித்து வாழவேண்டும் படமும் டிஜிட்டலில் எச்டி பிரிண்டில் கண்ணுக்கு விருந்தாய் வர உள்ளது. அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 30 நவம்பர் 1974 ஆம் ஆண்டு சிரித்துவாழ வேண்டும் படம் வெளியானது. 48 ஆண்டுகள் கடந்த நிலையில் விரைவில் படம் வெளியாக உள்ளது.

    English summary
    One of the important films where MGR acted in two roles was the film 'Sirithu Vazha Vendum'. The special feature of this film is that one person will be Acted as a police officer and another will be dressed as a Muslim. The film is a re-make of the Hindi film Zanjeer starring Amitabh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X