»   »  ரொம்ப நல்லவன்டா நீ...

ரொம்ப நல்லவன்டா நீ...

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் ஏ வெங்கடேஷ், முதல் முறையாக ஒரு முழு நீள காமெடி படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்கு ‘ரொம்ப நல்லவன்டா நீ' என்று தலைப்பிட்டுள்ளனர்.

காமெடி த்ரில்லராக தயாராகி வரும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க, வில்லனாக எத்தன் புகழ் ‘ சர்வஜித்' நடிக்கிறார்.

ஏ வெங்கடேஷ்

ஏ வெங்கடேஷ்

பல வெற்றி படங்களை இயக்கியதோடு, 'அங்காடி தெரு' படத்தில் வில்லனாக மிரட்டிய வெங்கடேஷ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

முழு நீள நகைச்சுவை

முழு நீள நகைச்சுவை

"என் படங்களில் நகைச்சுவைக்கு முக்கிய இடம் உண்டு. எனினும் முழு நீள காமெடி படம் நான் இயக்கியதில்லை. இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. முன்பின் அறியாத இரண்டு நபர்களின் ஏழு நாட்கள் நட்பு,அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களின் அடிப்படையில் அமைந்ததே ‘ரொம்ப நல்லவன்டா நீ', என்கிறார் வெங்கடேஷ்.

குறுகிய காலப் படம்

குறுகிய காலப் படம்

மனோகர் ஒளிபதிவில், ராம்சுரேந்தர் இசை அமைப்பில், கனல் கண்ணனின் சண்டை பயிற்சியில், விஜய் படத்தொகுப்பில் இந்த படம் குறிகிய காலத்தில் வேகமாக படமாக்கப்பட்டது.

வணிக ரீதியில்

வணிக ரீதியில்

'எனது இயக்கத்தில் வெளி வந்த பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக வெற்றிப் படங்களே. சமீபத்திய ட்ரெண்டான ஆன நகைசுவை இந்தப் படம் எங்கும் நிறைந்தது இருக்கும்," என்கிறார் வெங்கடேஷ் உறுதியாக.

English summary
Commercial director A Venkatesh is directing a full length comedy movie titled Romba Nallavanda Nee.
Please Wait while comments are loading...