சிவகார்த்திகேயனோட அந்தப் படம் பார்த்து சிரிப்பே வரல... உதயநிதியே ஓபனாக கலாய்க்கலாமா?
சென்னை: ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து உதயநிதி, பின்னர் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கினார்.
இறுதியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்திருந்த கலகத் தலைவன் திரைப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி மாமன்னன் தான் தனது இறுதிப் படம் என அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்ட சிவகார்த்திகேயன் படத்தை உதயநிதி ஓபனாக கலாய்த்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

கலகத் தலைவன் உதயநிதி
ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் பட தயாரிப்பு, விநியோகம் என திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் உதயநிதி. 2008ம் ஆண்டில் விஜய் நடித்த குருவி மூலம் தயாரிப்பாளரான உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் வழியே ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார். தொடர்ச்சியாக மனிதன், சைக்கோ உட்பட பல படங்களில் நடித்துள்ள உதயநிதி, கடந்த மாதம் அமைச்சராக பொறுப்பேற்றார். அதனால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாமன்னன் தான் தனது கடைசி திரைப்படம் என அறிவித்துவிட்டார். இறுதியாக மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படம் உதயநிதி நடிப்பில் வெளியாகியிருந்தது.

எஸ்கே படத்தை கலாய்த்த உதய்
கடந்தாண்டு ரிலீஸான பல படங்களின் தமிழ்நாட்டு தியேட்டர் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் தான் கைப்பற்றியிருந்தது. இதில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் வரவேற்போடு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தன. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டான் படத்தையும் ரெட் ஜெயன்ட் தான் வெளியிட்டிருந்தது. அந்தப் படம் குறித்து உதயநிதி பேசியிருந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது. சிபி சக்ரவர்த்தி இயக்கிய டான் படத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன், சூரி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படம் பார்த்து சிரிப்பே வரல
காமெடி பிளஸ் சென்டிமெண்ட்டல் படமாக வெளியான டான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்திருந்தது. இந்தப் படத்தையும் ரெட் ஜெயன்ட் தான் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் டான் படத்தை ரிலீஸ் செய்தது குறித்து உதயநிதி காமெடியாக பேசியுள்ளார். அதில், டான் படத்தை வாங்கிய பிறகு வீட்டில் நானும் எனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து பார்த்தோம். அப்போது எந்த சீனிலும் சிரிப்பே வரவில்லை. சுத்தமாக காமெடி எடுபடவே இல்லை. என் நண்பர்களும் படத்தில் காமெடி ஒர்க்அவுட் ஆகவில்லை என கூறினர்.

ஆனால் நடந்தது வேறு
டான் பார்த்த பிறகு சிவகார்த்திகேயனிடம் சில காமெடி பெரிதாக கனெக்ட் ஆகல, எடிட்டிங்ல கொஞ்சம் காட்சிகளை எடுத்துடலாம்ன்னு சொன்னேன். ஆனால், சிவா அதை எடிட் செய்யாமல் கூடுதலாக சில காட்சிகளை சேர்த்து படத்தை வெளியிட்டார். அதன்பின்னர் தியேட்டரில் சென்று பார்த்தால் படமே வேற லெவலில் இருந்தது, ரசிகர்களுக்கும் ரொம்ப பிடித்திருந்தது. சிவகார்த்திகேயன் கேரியரில் டான் ரொம்ப முக்கியமான படம் என பாராட்டியுள்ளார். டான் படத்தையும் சிவகார்த்திகேயனையும் உதயநிதி ஜாலியாக கலாய்த்து பேசிய வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. முக்கியமாக டான் படத்தின் கதையை முதலில் உதயநிதிக்கு தான் சொன்னாராம் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. அவர் தான் கல்லூரி மாணவராக செட் ஆகாது என மறுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











