சலார் படத்தில் பிரபாஸ் கெட்டப் இதுதானா…? லீக்கான ஷூட்டிங் வீடியோ… ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐதராபாத்: பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் பிருத்விராஜ் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவகும் சலார் படத்தில் பிரபாஸின் கெட்டப் வெளியாகி அவரது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்ட வரும் சலார்

மிரட்ட வரும் சலார்

கேங்ஸ்டர் படங்களுக்கான பல மரபுகளை உடைத்தெறிந்ததோடு, இந்தியத் திரையுலகையே புரட்டிப் போட்டது 'கேஜிஎஃப்' திரைப்படம். யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். 'கேஜிஎஃப்'-ஐ தொடர்ந்து சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். ஹோம்பலே நிறுவனம் தான் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சலார் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். முதன்முறையாக பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி சலார் படத்தில் இணைந்துள்ளதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சலார் ரிலீஸ் தேதி

சலார் ரிலீஸ் தேதி

'சலார்' படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றும் வரும் நிலையில், ஆகஸ்ட் 15ல் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, இந்தப் படம் 2023 செப்டம்பர் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஃபுல் ஆக்சன் மோடில் இருக்கும் பிரபாஸின் மிரட்டலான போஸ்டரையும் படக்குழு அப்போது வெளியிட்டிருந்தது. அதேநேரம் இந்தப் போஸ்டர் 'கே.ஜி.எஃப்' படத்தின் அதே கலர் டோனில் இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வில்லனாகும் பிருத்விராஜ்

வில்லனாகும் பிருத்விராஜ்

முக்கியமாக சலார் படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடிப்பதும் உறுதியானது. பிருத்விராஜ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி சலார் படத்தில் வரதராஜ மன்னார் என்ற கேரக்டரில் பிருத்விராஜ் நடித்து வருகிறார். இந்நிலையில், சலார் படத்தில் பிரபாஸ் கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பாகுபலிக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பிரபாஸ் கேரக்டர்

பிரபாஸ் கேரக்டர்

அதுமட்டும் இல்லாமல் பிரபாஸின் ஆதிபுருஷ் டீசரும் சமீபத்தில் வெளியாகி பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனால், ஆதிபுருஷ் படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் குறைந்துவிட்டது. இந்நிலையில், சலார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பிரபாஸின் வீடியோ லீக் ஆகியுள்ளது. இதில், பிரபாஸின் கெட்டப் ரொம்ப சாதாரணமாகவே இருக்கிறது. பிரபாஸ் இந்த வீடியோவில் ஜாலியாக சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார். கேஜிஎஃப் ராக்கி பாய் போல வித்தியாசமான கெட்டப்பில் பிரபாஸை பார்க்கலாம் என காத்திருந்த ரசிகர்கள், இந்த வீடியோவை பார்த்து ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X