»   »  சிம்பு தம்பி... இத இத இதத்தான் உங்ககிட்ட எதிர்ப்பார்க்கிறோம்!#DemonetisationAnthem

சிம்பு தம்பி... இத இத இதத்தான் உங்ககிட்ட எதிர்ப்பார்க்கிறோம்!#DemonetisationAnthem

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்பு தம்பி... இத இத இதத்தான் உங்ககிட்ட எதிர்ப்பார்க்கிறோம்!- வீடியோ

சென்னை: 2015.. பெருமழை மழை. ஊழித் தாண்டவம் ஆடின மாதிரி திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம். அரசு செயலற்று நிற்கிறது. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், வெளியானது ஒரு கேவலப் பாட்டு.

அது சிம்புவும் அனிருத்தும் சேர்ந்து உருவாக்கிய பீப் பாட்டு. மிகக் கேவலமான வார்த்தைகள் கொண்ட அந்தப் பாடல் குறித்து மீடியாவில் எழுந்த விவாதம், வெள்ள பாதிப்புச் செய்திகளை மழுங்கடித்தது... திசை திருப்பியது.

தலைமறைவு

தலைமறைவு

நான் எழுதி, பாடி ரகசியமாக வைத்த பாடலை யாரோ திருடி வெளியிட்டுள்ளனர். அதைப் பற்றி விசாரிங்க முதல்ல என்று எகிறினார் சிம்பு. கோவை போலீஸ் விசாரணைக்கு அழைக்க, சிம்பு தலைமறைவானார். பல நாட்கள் அப்படி இருந்தார். அவ்வப்போது டிவிக்களுக்கு மட்டும் போனில் பேட்டி கொடுத்தார். மக்கள் இந்த பிரச்சினையை மறந்த நேரத்தில், விசாரணைக்குப் போய் வந்தார்.

இமேஜ் டர்ர்ர்

இமேஜ் டர்ர்ர்

ஆனால் அதற்குள் அவரது பெயர், இமேஜ் வேண்டிய மட்டும் சிதைந்து போனது. சிம்பு என்றாலே பீப் என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்குப் போனது. சிம்புவின் பெற்றோர் அவருக்காக மீடியா முன் கண்ணீர் விட்டனர்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

பிறகு அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. ஜல்லிக்கட்டுப் போராட்டம் வந்தது. சிம்பு உணர்ச்சிமயமாக அதில் பங்கேற்றார். மக்களும் பீப்பை மறந்துபோனார்கள். இப்போது அதற்கு பிராயச்சித்தம் தேடுகிற வகையில் பணமதிப்பிழப்பைக் கிண்டலடித்து ஒரு பாடல் பாடியுள்ளார் சிம்பு.

டிமானிடைசேஷன் ஆந்தம்

டிமானிடைசேஷன் ஆந்தம்

இந்தப் பாடலுக்கு டிமானிடைசேஷன் ஆந்தம் என்று தலைப்பிட்டுள்ளார். 'காந்தி நோட்டு ரெண்டும் அம்பேலாகிப் போயாச்சு.. வாழ்க்கை ஏடிஎம்மில் அஸ்கு புஸ்கு ஆயாச்சு...' என்று தொடங்கும் இந்தப் பாடல், பணமதிப்பிழப்பு காலத்தில் மக்கள் பட்ட பாடுகளை விவரிக்கிறது. அந்த காலகட்டத்தில் ஏடிஎம், வங்கி வாசல்களில் மக்கள் காத்திருந்தது, மயங்கி விழுந்து இறந்தது என அனைத்துச் செய்திகளையும் வீடியோவாகப் பதிவு செய்து இந்தப் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

வெல்கம் சிம்பு

வெல்கம் சிம்பு

இந்தப் பாடல் தட்றோம் தூக்கறோம் என்ற படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. கபிலன் வைரமுத்து பாடலை எழுத, சிம்பு பாடியுள்ளார். சிம்பு மாதிரி கலைஞர்கள் இதுபோல இன்னும் நிறைய விழிப்புணர்வுப் பாடல்களை உருவாக்க வேண்டும். சிம்பு, இது நல்ல மாற்றம்... தொடரட்டும்.

Read more about: simbu, beep song, சிம்பு
English summary
Simbu - Kabilan Vairamuthu's demonetisation anthem become viral online

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil