»   »  நடிகையை கடத்தி மானபங்கப்படுத்த சொன்னது ஒரு பெண்: யார் அவர்?

நடிகையை கடத்தி மானபங்கப்படுத்த சொன்னது ஒரு பெண்: யார் அவர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையை கடத்தி மானபங்கப்படுத்தச் சொன்னது ஒரு பெண் என்று தெரிய வந்துள்ளது.

பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் நடிகையின் முன்னாள் கார் டிரைவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நடிகை சில திடுக்குடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

பெண்

பெண்

காரில் என்னை கடத்தி மானபங்கம் செய்யச் சொன்னது ஒரு பெண் என்று என்னை கடத்தியவர்கள் தெரிவித்தார்கள். அந்த பெண் யார் என்று தெரியவில்லை என நடிகை கூறியுள்ளார்.

திலீப்

திலீப்

நடிகைக்கும், மலையாள நடிகர் திலீப்புக்கும் இடையே பிரச்சனை உள்ளது. அதனால் அவர் தான் ஆள் வைத்து நடிகையை கடத்தி அசிங்கப்படுத்திவிட்டார் என்று கூறப்பட்டது.

மறுப்பு

மறுப்பு

நடிகைக்கும், எனக்கும் பிரச்சனை இருந்தது உண்மை தான். ஆனால் அதற்காக அவரை கடத்தி அசிங்கப்படுத்த நான் யாரையும் அனுப்பவில்லை என்றார் திலீப்.

யார் அவர்?

யார் அவர்?

நடிகையை கடத்தி அசிங்கப்படுத்த 7 பேருக்கு பணம் கொடுத்த அந்த பெண் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த பெண் யாராக இருக்கும் என்பதை மலையாள திரையுலகினர் யூகிக்கத் துவங்கிவிட்டனர்.

English summary
Malayalam actress who was abducted and molested said that a woman had arranged seven persons to do this nasty act.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil