Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மூன்று இளம் தனி ஒருவர்களுக்கு கிடைத்த வெற்றிதான் தனி ஒருவன்.. யூ டியூபர் அஷ்வினின் அசத்தல் அனலைஸ்!
சென்னை: தனி ஒருவன் படம் ரிலீஸ் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் அந்தப் படம் குறித்து இன்ச் பை இன்ச்சாக அனலைஸ் செய்துள்ளார் இளம் யூ டியூபரான அஷ்வின்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியான படம் தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி, நயன்தாரா, கணேஷ் வெங்கட் ராம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்தப் படத்தில் மித்ரன் என்ற கேரக்டரில் ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருந்தார். சித்தார்த் அபிமன்யு என்ற கேரக்டரில் அரவிந்த் சுவாமி மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார்.
நான்
அவருடன்
இல்லாத
அந்த
6
நாட்களில்தான்
ஏதோ
நடந்துள்ளது..
சுஷாந்தின்
அக்காவை
கோர்த்துவிடும்
ரியா!

தனி ஒருவன்
இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இளம் யூ டியூப் விமர்சகரான அஷ்வின் படம் குறித்து அலசியுள்ளார்.

இரண்டாவது இன்னிங்ஸ்
ஜெயம் ரவி தனது முதல் இன்னிங்ஸை ஜெயம் படத்தின் மூலம் தொடங்கி சந்தோஷ் சுப்ரமணியம் உட்பட பல வெற்றி படங்களை கொடுத்தார். தனி ஒருவன் படம் அவரது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க வழிகுத்ததையும் குறிப்பிட்டுள்ளார். ரவி - ராஜா கூட்டணியில் வந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

விஜய் பாராட்டு
தனி ஒருவன் படம் அதற்கு முன்பு ஜெயம் ரவி நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததையும் கூறியுள்ளார். தனி ஒருவன் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய், பாராட்டியதையும், சிவகார்த்திகேயன் தனக்காக ஒரு கதையை தயார் செய்ய கூறியதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

கேரக்டர்கள்
மேலும் தனி ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து ஜெயம் ரவியும் மோகன் ராஜாவும் இணைந்து வீடியோ வெளியிட்டது குறித்தும் பேசியிருக்கிறார். மேலும் படத்தில் வரும் டயலாக்குகள் குறித்தும் நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமையா, நாசர் உள்ளிடோரின் நடிப்பு குறித்தும் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆயிரம் மடங்கு
படத்தின் சில காட்சிகளையும் ரசித்து விளக்கியுள்ளார். குறிப்பாக அரவிந்த் சுவாமியின் கொடுர வில்லன் கேரக்டரை குறிப்பிட்டு பேசியுள்ள அஷ்வின், தனி ஒருவன் 2, ஆயிரம் மடங்கு பிரமாண்டமாக இருக்கும் என அவரது உதவி இயக்குநர்கள் கூறியதையும் தனது வீடியோவில் நினைவு கூர்ந்துள்ளார்.