»   »  பட்டையைக் கிளப்பிய கட்டப்பா எபெக்ட்... தெலுங்கில் வில்லனாகிறார் 'மிருகம்' ஆதி

பட்டையைக் கிளப்பிய கட்டப்பா எபெக்ட்... தெலுங்கில் வில்லனாகிறார் 'மிருகம்' ஆதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி படத்தில் சத்யராஜின் நடிப்பைப் பார்த்து வியந்த தெலுங்குப் படவுலகம், தமிழில் இருந்து புதிய வில்லன்களை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனராம். அந்த வரிசையில் நடிகர் ஆதி புதிய தெலுங்குப் படமொன்றில் வில்லனாக அறிமுகம் ஆவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வசூலில் மற்ற படங்களை வீழ்த்தி புதிய சாதனைகளை புரிந்து வருகிறது பாகுபலி. இப்படத்தில் கட்டப்பா என்ற வேடத்தில் நடித்துள்ளார் சத்யராஜ். முதல் பாகத்தின் இறுதியில் பிரபாஸை அவர் தானே கொன்றதாகக் கூறுவதோடு படம் முடிவடைகிறது.

இதனால், தெலுங்கு ரசிகர்கள் மனதில் சத்யராஜ் வில்லன் கதாபாத்திரமாகவே இடம் பிடித்து விட்டார்.

டீசண்ட் வில்லன்...

டீசண்ட் வில்லன்...

வில்லன் என்றாலே கோடூரத் தோற்றம், வித்தியாசமான சிரிப்பு என்ற நிலை மாறி, டீசண்டான வில்லன்களை தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழிலும் கூட சமீபகாலமாக ஹீரோ நடிகர்களே சில படங்களில் வில்லன்களாகவும் மிரட்டியுள்ளனர்.

கிட்டப்பா மாதிரியே...

கிட்டப்பா மாதிரியே...

அந்த வகையில், பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து சத்யராஜ் மாதிரியே, தமிழில் இருந்து புதிய வில்லன்களை தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளார்களாம்.

வில்லனாகும் ஆதி...

வில்லனாகும் ஆதி...

எனவே, அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க தமிழ் நடிகர் ஆதியுடன் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர் பொயப்பட்டி சீனு இயக்க உள்ளாராம்.

தமிழில் நாயகன்...

தமிழில் நாயகன்...

தமிழில் மிருகம் படம் மூலம் அறிமுகமான ஆதி, ஈரம், அரவான், யாகாவாராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு இயக்குநர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் ஆவார்.

தெலுங்கில் அறிமுகம்...

தெலுங்கில் அறிமுகம்...

தெலுங்கில் 2006ம் ஆண்டு வெளியான ஒக வி சித்ரம் என்ற படத்தில் பிரதீப் பினிசெட்டி என்ற பெயரில் நாயகனாக அறிமுகமானார் ஆதி. அதனைத் தொடர்ந்து குண்டெல்லோ சகோதரி என்ற மற்றொரு தெலுங்குப் படத்தில் அவர் நடித்தார்.

மறுபிரவேசம்...

மறுபிரவேசம்...

பின்னர் தெலுங்குப் படங்களில் நடிக்காத ஆதி, தமிழிலில் தன் கவனத்தைத் திருப்பினார். இந்த நிலையில், அவர் மீண்டும் தெலுங்கில் வில்லனாக மறுபிரவேசம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Young Telugu actor Aadhi Pinisetty, who is more popular in Tamil, has changed his gears from playing hero roles to now an antagonist. According to the latest reports, Aadhi has been roped in to play the villain's role in the much awaited Allu Arjun film in Boyapati's direction.
Please Wait while comments are loading...