பிக்பாஸ் வீடா ஆபாச குடோனா?.. அதை பார்வதி பிடிச்சா பிடிக்கும்.. எல்லை மீறிய ஆதிரை, FJ.. இது ஓவர்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. நந்தினி சுய விருப்பத்தின்பேரில் வீட்டை விட்டு வெளியேறினார். இயக்குநர் பிரவீன் காந்தி முதல் ஆளாக எவிக்ட் செய்யப்பட்டார். இப்போது 18 பேர் வீட்டில் இருக்கிறார்கள். தினமும் சண்டை சச்சரவோடு நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் எஃப்ஜேவும், ஆதிரையும் பேசியது சமுக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்துவருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அரோரா, எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா, கானா வினோத், வியானா, பிரவீன், சுபிக்ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், கலையரசன் என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டார்கள். இவர்கள் பெரிய அளவில் பிரபலம் இல்லாவிட்டாலும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு போவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.
இரண்டு பேர் வெளியேற்றம்: அதற்கேற்றபடிதான் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இருந்தது. தினமும் ஏதோ ஒரு சண்டை, பிரச்னை என்று போய்க்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமையில் போட்டியில் பங்கேற்றிருந்த நந்தினி, இனியும் தனக்கு இந்த வீட்டில் இருப்பதில் விருப்பமில்லை என்று கூற; அவரை பிக்பாஸ் வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் காந்தி முதல் ஆளாக வீட்டிலிருந்து எவிக்ட் செய்யப்பட்டார்.

பொம்மை டாஸ்க்: இரண்டு பேர் வெளியேறியதைத் தொடர்ந்து இப்போது 18 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிக்பாஸ் ஏகப்பட்ட டாஸ்க்குகளை கொடுத்துவருகிறார். அந்தவகையில் பொம்மை டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின்போது போட்டியாளர்களுக்கு சின்ன சின்ன காயங்களும், அவர்களுக்குள் பெரிய பெரிய பிரச்னைகளும் உருவாகின. முக்கியமாக தன்னை தொடக்கூடாத இடத்தில் விஜே பார்வதி தொட்டு அமுக்கிவிட்டார் என்று FJ காண்டானார்.
ஆபாச பேச்சு: அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேசமயம் இதுகுறித்து பார்வதி பெரிதாகவெல்லாம் சட்டை செய்துகொள்ளவில்லை. சூழல் இப்படி இருக்க தன்னிடம் ஆதிரை பேசிக்கொண்டிருந்தபோது, 'தொடாமல் பேசுங்கள். பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?' என கேட்டார். அதற்கு ஆதிரையோ, 'அவங்க (பார்வதி) வந்து பிடிச்சா ஒன்னும் சொல்லமாட்டிங்களே என்று கேட்க; அதற்கு FJ, அவங்க பிடிச்சா பிடிக்கும் என்று கூறினார்.
ஆபாச குடோனா?: இதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு பேரை மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியையே கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்று பார்த்தால் இப்படி ஆபாசமாக பேசுகிறார்களே. நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சொன்னதில் தவறே இல்லை; இப்படியே போனால் அதுதான் நடக்கும் எனவும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











