»   »  அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் ஆகம் படக்குழு

அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் ஆகம் படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு மரியாதை செலுத்தும் விதமாக "ஆகம்" படத்தில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய கல்வியின் நிலையையும், கற்ற கல்விக்கான வேலை வாய்ப்புகளின் தரத்தைப் பற்றியுமான கதைக்களத்தைக் கொண்டது ஆகம் படம்

ஜோஸ்டார் என்டர்பிரைசஸ்' நிறுவனம் தயாரிக்கும் படம் ஆகம். இந்தப் படத்தில் இர்ஃபான். ஜெயபிரகாஷ், ரியாஸ்கான், ரவிராஜா மற்றும் அறிமுக நாயகி தீக்சிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

புதுமுக இயக்குனர் V.விஜய் படத்தை இயக்குகிறார். ஜினேஷ் வசனம் எழுத, சதீஸ்குமார் கலையமைப்பு செய்ய, மனோஜ் கியான் படத் தொகுப்பு செய்ய இசையமைக்கிறார் விஷால் சந்திரசேகர். சோஷியல் த்ரில்லர் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது ‘ஆகம்'.

அப்துல் கலாமிற்கு அஞ்சலி

அப்துல் கலாமிற்கு அஞ்சலி

நாட்டின் முன்னேற்றத்தைத் தன் முழு மூச்சாகக் கொண்டிருந்த அப்துல் கலாம் அவர்களைப் பற்றி ஒரு பாட்டு எங்கள் படத்தில் அமைத்துள்ளோம். அதை அவருக்குக் திரையிட்டு காட்டவும் திட்டமிட்டிருந்தோம். காலத்தின் கட்டளையால் இந்த நாடே அவரை இன்று இழந்து தவிக்கிறது.

மாமேதைக்கு அஞ்சலி

மாமேதைக்கு அஞ்சலி

நாட்டு மக்களின் அன்பையும், ஆதர்ஷத்தையும் பெற்ற கலாம் அவர்களைப் பற்றி இயற்றிய பாடல் கொண்டே அந்த மாமேதைக்கு, உன்னத ஆன்மாவிற்கு அஞ்சலி செய்ய எங்கள் படக் குழு திட்டமிட்டுள்ளது." என்கிறார் படத்தின் இயக்குநர் விஜய் ஆனந்த் ஸ்ரீ ராம்.

வெளிநாட்டு மோகம்

வெளிநாட்டு மோகம்

ஒவ்வொரு தனி மனிதத் தேவையும், சமூதாய நிலையும் இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்கான தேடலை அதிகப் படுத்தியுள்ளது. உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை எட்டிபிடிக்க நினைக்கும் இன்றைய சமூதாயத்தின் வெளிநாட்டு மோகமும், தான் நிலை பெற வேண்டும் என்ற எண்ணமும் இன்று பல இளைஞர்களை உலுக்கி வருகிறது.

இந்தியாவில் பணி

இந்தியாவில் பணி

இன்று இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல ‘இந்தியனே வெளியேறாதே' என்ற முழக்கம் ஒவ்வோரு மாணவனுக்கும் எட்டும் வகையில் ஒலிக்கச் செய்ய வேண்டியிருக்கிறது. இத்தகைய சிக்கல்களும் அதனை நிவர்த்தி செய்யும் வழி வகைகளையும் ஆராயும் படம்தான் ஆகம் என்கிறார் இயக்குநர்.

English summary
'Aagam' to pay a rich tribute to the departed 'Visionary' Dr Abdul Kalam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil