For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வின் பண்ணனும்னு நினைக்கிறீங்களா.. வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறீங்களா.. அர்ச்சனாவை ஆஃப் பண்ண ஆஜீத்

  |

  சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் அதிரடியான மூன்றாவது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

  Captaincy task-ல் உண்மையில் யார் Winner தெரியுமா? BALA vs Jithan RAMESH

  சுட்டிக் குழந்தை, பொடிப்பயன், ஜூனியர் பாபி சிம்ஹா என சூப்பர் சிங்கர் ஆஜீத்தை என்னதான் ரசிகர்கள் ட்ரோல் செய்தாலும், கால் டாஸ்க்கில் அர்ச்சனாவிடம் சரியான கேள்வியை கேட்டு கோல் போட்டுள்ளார் ஆஜீத்.

  அர்ச்சனாவை கால் கட் பண்ண வைத்திருப்பாரா ஆஜீத் என்பதை காண இன்றைய நிகழ்ச்சியை ரொம்பவே ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.

  பேய் அறைஞ்சமாதிரியே இருக்கியேப்பா பயில்வான்.. என்ன விஷயம்.. பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

  தீராத பிரச்சனை

  தீராத பிரச்சனை

  பேகேஜை ஆரி தான் தூக்கி சுமக்கிறார் எனக் கூறிவிட்டு பாலா, ஆரியிடம் அத்தனை பழைய விஷயங்களையும் கேட்டு மீண்டும் அவரை கிளறியுள்ளதை இன்றைய முதல் மற்றும் இரண்டாவது புரமோ மூலம் காண முடிந்தது. பாலா மறுபடி மறுபடி தவறான பாதையையே தேர்ந்தெடுத்து விளையாடுகிறார் என நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர்.

  யார் ஏமாற்றியது

  யார் ஏமாற்றியது

  வைஸ் கேப்டனாக கூட பொறுப்பை வகிக்க முடியாத அளவுக்கு பின் வாங்கும் பாலாஜி முருகதாஸ், தலைவர் டாஸ்க்கிற்காக அப்படி ஆரியுடன் சண்டை பிடித்தது தேவையில்லாத விஷயம். பாலாவுக்கு ஜித்தன் ஜெயித்தது பிரச்சனை இல்லை. ஆரி தன்னை மானிட்டர் பண்ணது தான் பிரச்சனை என்று தெளிவாக தெரிகிறது. இந்த வார இறுதியில் குறும்படம் போட்டுக் காட்டுவதற்கு முன்பே ரசிகர்கள் குறும்படங்களை வெளியிட்டு பாலா மீது தான் தவறு என்பதை சுட்டிக் காட்டி சுளுக்கு எடுத்து வருகின்றனர்.

  மூன்றாவது புரமோ

  மூன்றாவது புரமோ

  இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் அர்ச்சனாவுக்கு சுட்டிக் குழந்தை ஆஜீத் கால் செய்து பேசுகிறார். ஆஜீத் என்ன அப்படி அர்ச்சனாவிடம் கேட்டு விடப் போகிறான் என நினைத்த ரசிகர்களுக்கு, ஆஜித்தின் கேள்வி செம ட்விஸ்ட்டாகவும், பாரேன் இவனுக்குள்ள என்னவோ இருந்திருக்கிறது என்றும் பேச வைத்துள்ளது.

  ஆரவாரம் எங்கே போனது

  ஆரவாரம் எங்கே போனது

  பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போது, சாமியாடி போல, இருக்கு என ஒவ்வொருத்தருக்கும் பட்டம் எல்லாம் கொடுத்து மெர்சல் காட்டிய அர்ச்சனா, அப்படியே ஆளே மாறி அன்பு, பாசம், லவ் பெட், அன்பு தான் ஜெயிக்கும் என தனது கேம் ஸ்டராட்டஜியை மாற்றி விளையாடுவது ஏன் என்பது போல ஆஜீத் பேசத் தொடங்கினார்.

  அப்படி என்ன கேள்வி

  அப்படி என்ன கேள்வி

  அடிக்கடி வீட்டுக்கு போகணும்னு சொல்றீங்க.. இல்லையா? ஆனால், டாஸ்க் எல்லாமே வேற லெவல்ல பர்ஃபார் பண்றீங்க.. நான் பார்த்தவரைக்கும் எல்லாமே சூப்பரா விளையாடி இருக்கீங்க, என்னோட டவுட் வந்து உண்மையிலேயே வீட்டுக்கு போகணுமா? இல்லை இந்த ஷோவை வின் பண்ணனுமா? உங்களோட எண்ணன் என்ன? என நறுக்கென கேள்வி கேட்க அங்கேயே புரமோவை எடிட்டரும் நறுக்கென கட் பண்ணிட்டார்.

  ஓவர் நக்கல்

  ஓவர் நக்கல்

  கமல் சார் ஷோவில், ஷிவானிக்கு பதில் சொல்லும் போது நான் என் நக்கல இன்னும் இறக்கலைன்னு சொன்னீங்க, வரும் போது அந்த நக்கல் எல்லாம் நிறைய தெரிஞ்சது.. போக, போக வந்து குறைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங் எனக்கு என அர்ச்சனா அக்காவிடம் ஓவர் நக்கலாக கேள்வி கேட்டதும் ரியோவின் முகம் மாரியதை காண்பித்தனர்.

  ஆஜீத்துக்கு பாயாசம் இருக்கு

  ஆஜீத்துக்கு பாயாசம் இருக்கு

  டம்மி மம்மி சம்யுக்தா வெளியே போன நிலையில், அர்ச்சனாவிடம் நக்கலா இருக்கீங்கன்னுலாம் ஆஜீத் கேட்டதை பார்த்து, தம்பி உனக்கு சீக்கிரமே பாயாசம் இருக்கு என கமெண்ட்டுகளில் கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டனர். மேலும், பாலா சொல்லித் தான் ஆஜீத் இந்த கேள்விகளை அர்ச்சனாவிடம் கேட்டிருப்பான் என்றும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.

  English summary
  Aajeedh asks Archana a very valuable question in the caller task. Archana really upset after that. Bigg Boss Tamil 4 Day 58 promo carry these scenes.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X