»   »  'ஆகாச மிட்டாயி'... சமுத்திரக்கனி இயக்கிய மலையாளப் படம் அக்-6-ல் ரிலீஸ்!

'ஆகாச மிட்டாயி'... சமுத்திரக்கனி இயக்கிய மலையாளப் படம் அக்-6-ல் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் : சமுத்திரக்கனி 'ஒப்பம்', 'கரிங்குன்னம் சிக்சஸ்' படங்களின் மூலம் ஒரு நல்ல நடிகராக மலையாள ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார். தற்போது 'ஆகாச மிட்டாயி' படத்தின் மூலம் இயக்குனராகவும் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவாகி தமிழில் மக்களிடம் வரவேற்பு பெற்ற 'அப்பா' படம் தான் இப்போது மலையாளத்தில் 'ஆகாச மிட்டாயி' என்கிற பெயரில் ரீமேக்காகியுள்ளது.

Aakasha mittayi directed by samuthirakani was releasing on october 6

படத்தின் கதாநாயகனாக சமுத்திரகனி நடித்த ரோலில் ஜெயராம் நடித்துள்ளார். கதாநாயகியாக இனியா நடித்துள்ளார். தம்பி ராமையா கேரக்டரில் கலாபவன் சாஜன் நடித்துள்ளார்.

Aakasha mittayi directed by samuthirakani was releasing on october 6

இந்தப்படத்தை கடந்த ஓணம் பண்டிகை அன்றே ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் இந்த ஓணம் பண்டிகையில் ரிலீசானதால், ஓணம் ரேஸில் இருந்து பின் வாங்கினார்கள். இப்போது அக்-6-ம் தேதி 'ஆகாச மிட்டாயி' படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

English summary
Samuthirakani was named as a good performer by the Malayalam fans. He has also directed a Malayalam film 'Aakasha Mittaayi'. 'Aakasha mittaayi' is the remake of tamil movie 'Appa'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil