வாரிசு படத்திற்காக ‘ஆள் தோட்ட பூபதி’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறதா? அட புது தகவலா இருக்கே!

சென்னை : விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்திற்காக ஆள் தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது

தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா,சங்கீதா,ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

வாரிசு

வாரிசு

பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. தளபதி 66 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வந்த படத்திற்கு வாரிசு என தலைப்பு வைக்கப்பட்டது.

பர்ஸ்ட் லுக் வெளியானது

பர்ஸ்ட் லுக் வெளியானது

விஜய்யின் பிறந்த நாள் அன்று வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. வாரிசு படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது.

ஆள் தோட்டபூபதி ரீமிக்ஸ்

ஆள் தோட்டபூபதி ரீமிக்ஸ்

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் பாடல் குறித்த சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் யூத் படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ஆள் தோட்டபூபதி நானடா பாடலை ரிமீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2002ம் ஆண்டு கபிலனின் பாடல் வரியில் ஷங்கர் மகாதேவனின் குரலில் வெளியான இந்த பாடலுக்கு விஜய், சிம்ரன் கலக்கலாக நடனமாடி இருந்தனர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு இந்த பாடல் மீண்டும் ரீமிக்ஸாக உள்ளது.

தீபாவளிக்கு முதல் பாடல்

தீபாவளிக்கு முதல் பாடல்

இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், தீபாவளி அன்று இப்படத்தின் முதல் பாடலை வெளியிடப்படவிருக்கிறது. தற்போது அந்த பாடலை உருவாக்கும் பணிகளில் தமன் ஈடுபட்டுள்ளார். குத்து பாடலாக மரண மாஸாக இந்த பாடல் எப்படி உருவாகிறது என்ற புகைப்படம் ஒன்றையும் தமன் வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X