twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆலமரம்… மண் மணக்கும் திகில் காதல் கதை!

    By Mayura Akilan
    |

    ஆலமரம் ஒரு மண் மணக்கும் கிராமத்து காதல் திகில் கதையாம். சமீபமாக திகில் படங்களுக்கு ஏக வரவேற்பு கிடைத்து

    வருகிறது. யாமிருக்க பயமே, சரபம், அரண்மனை வரிசையில் தொடர்ச்சியாக அடுத்து வெளி வர உள்ள படம் ‘ஆலமரம்'. இயக்குனர் பாக்கியராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ். என். துரைசிங் ஆலமரம் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

    இதில் ஹேமந்த் குமார், அவந்திகா மோகன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராம்ஜீவன் இசை அமைக்கிறார். உதய்சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். பீக்காக் மோசன் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

    கிராமத்து பின்னணியில் வாழ்க்கையைத் துவக்கிய ஒவ்வொருவருக்கும், ஆலமரத்தின் முக்கியத்துவம் தெரிந்து இருக்கும்.

    ஒவ்வொரு ஆலமரமும் தன்னுள் அடக்கி இருக்கும் கதைகள் அதன் விழுதுகளைவிட நீளமாகவும், அதன் வேர்களைவிட ஆழமாகவும் இருக்கும்.

    எனவேதான் ‘ஆலமரம்' என்ற தலைப்பில் அத்தகைய ஒரு உன்னதமான பதிவைப் படமாக தயாரித்துள்ளனர்.

    திகில் படம்

    திகில் படம்

    இப்படம் குறித்து இயக்குனர் துரைசிங் கூறும்போது, பொதுவாக திகில் படங்களில் வரும் அந்நிய வாடை என் படத்தில் இருக்காது. இயக்குநர் கே.பாக்யராஜிடம் திரைக்கதை கற்றேன். நட்புக்காக பா.விஜய் பாடல் எழுதி கொடுத்துள்ளார் என்றார்.

    மண் மணம் சார்ந்த காதல்

    மண் மணம் சார்ந்த காதல்

    நம் மண்ணின் மனதை சார்ந்த ஒரு காதல் கதையைதான் நான் திகில் கலந்து சொல்லி இருக்கேன், இது எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்றார்

    மக்கள் கூடும் இடம்

    மக்கள் கூடும் இடம்

    கோவில் இல்லாத ஊர் இல்லாத மாதிரி ஆலமரம் இல்லாத ஊரும் இருக்க முடியாது. ஆலமரம் மக்கள் கூடும் இடமாகவும், இளைப்பாரும் இடமாகவும், விளையாட்டு மைதானமாகவும். பிரச்னை பேசும் மன்றங்களாவும் இருந்திருக்கிறது.

    கிராமத்தினரின் வீடு

    கிராமத்தினரின் வீடு

    கிராமத்து மக்களுக்கு ஆலமரம் மறக்க முடியாத இன்னொரு வீடாக இருக்கும். அப்படிப்பட்ட ஆலமரம் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கதைகள்தான் படத்தின் கதை.

    ஆலமரத்தின் கதை

    ஆலமரத்தின் கதை

    ஆலமரத்தின் வேர்கள் மண்ணுக்கு தெரியாமலும், விழுதுகள் கிளைபரப்பி நிற்பதையும் கதை மாந்தர்களாக உலவ விட்டு உணர்வுகளை பதிவு செய்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் துரைசிங்.

    தியேட்டர் போய் படம் பாருங்க…

    தியேட்டர் போய் படம் பாருங்க…

    படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கதாநாயகி அவந்திகா, இது நல்ல படம், கண்டிப்பா தியேட்டர்ல போய் படம் பாருங்க என்றார்.

    இயக்குநர் தைரியசாலி

    இயக்குநர் தைரியசாலி

    என்னைய நம்பி வாய்ப்பு குடுத்த இயக்குநருக்கு நன்றி என்று ஆரம்பித்த ஹீரோ ஹேமந்த். கூட நடித்த ஹீரோயின் முதல் அனைவருக்கும் நன்றி சொல்லி முடித்தார்.

    பேயான அருக்காணி

    பேயான அருக்காணி

    வத்திக்குச்சி படத்தில் நடித்த சிந்து தற்போது வம்சம் தொடரில் அருக்காணியாக நடித்து வருகிறார் அவர்தான் இந்தப்படத்தில் பேயாக நடிக்கிறார். இதற்காக சிகரெட் எல்லாம் குடித்தேன் என்றார்.

    தென் மாவட்ட கிராமங்களில்

    தென் மாவட்ட கிராமங்களில்

    இந்த ‘ஆலமரம்', தேனி, மதுரை ஆகிய ஊர்களின் இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுப்புறங்களில் படமாக்கபட்டுள்ளது. அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் ‘ஆலமரம்'வெளியாக உள்ளது.

    English summary
    Aalamaram is a tamil film directed by S.N.Duraisingh. It is a horror cum romantic movie with interesting twists in the story. Music is composed by Ramjeevan, Photography by Udayashankar and Editing is done by Palanivel
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X