For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  செத்த பிறகு மெழுகுவர்த்தி ஏந்தி என்ன பயன்? பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக கொதித்த அனுராக் மகள்

  |

  மும்பை: இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் மகள் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ஏகப்பட்ட பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யப்.

  விக்கி படத்தில் கமிட்டான அனிருத்தின் 'செல்லம்மா'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  சமீபத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் ஷேர் செய்த புகைப்படத்திற்கு கீழ் வந்த ஆபாச கமெண்ட்டுகளுக்கு எதிராக கண்டன போஸ்ட் ஒன்றை பதிவிட்டு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆலியா..

  அனுராக் காஷ்யப்

  அனுராக் காஷ்யப்

  கோப்ரா படத்தை இயக்கி வரும் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுராக் காஷ்யப். பிளாக் ஃபிரைடே, கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், மன்மர்ஜியான் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களை இயக்கி உள்ளார். கங்கனா ரனாவத்தின் குயின் படத்தை தயாரித்தவர் இவர் தான்.

  அனுராக் மகள்

  அனுராக் மகள்

  நடிகை டாப்சியின் புதிய படமான தோபாராவை இயக்கி வருகிறார் அனுராக் காஷ்யப். இந்நிலையில், சமீபத்தில் அனுராக்கின் மகளான ஆலியா காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி மற்றும் உள்ளாடைகள் மட்டும் அணிந்து எடுத்த போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கினார்.

  ஆபாச கமெண்ட்ஸ்

  ஆபாச கமெண்ட்ஸ்

  அந்த போட்டோக்களுக்கு கீழ் பல நெட்டிசன்கள் ஆபாசமான கமெண்ட்டுகளையும் உன்னை பலாத்காரம் செய்துவிடுவேன், கொன்றுவிடுவேன் என மிரட்டும் தொனியிலும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்தன. இதனால் ரொம்பவே அப்செட்டான ஆலியா தனது இன்ஸ்டாகிராம் கணக்கையே டெலிட் செய்யும் முடிவுக்கு வந்து விட்டார்.

  செத்த பிறகு மெழுகுவர்த்தி

  செத்த பிறகு மெழுகுவர்த்தி

  ஆனால், தனது முடிவை மாற்றிக் கொண்டு மன உறுதியுடன் தனது ஹேட்டர்களுக்கு எதிராக தற்போது ஆலியா பதிவிட்டுள்ள நீண்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது. அதில், இதுவும் பாலியல் ரீதியான தொல்லை தான் என்றும், நம் நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண்கள் உயிர் இழந்தால் உடனே மெழுகுவர்த்தி ஏந்திக் கொண்டு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

  உயிரோடு இருக்கும் போது

  உயிரோடு இருக்கும் போது

  ஆனால், உயிரோடு இருக்கும் போது ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் யாருமே அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால் தான் வக்கிரப் புத்தி உடையவர்கள் தொடர்ந்து இது போன்ற பாலியல் ரீதியான மிரட்டல்களை பல பெண்களுக்கு ஆன்லைனில் கொடுத்து வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

  உடை சுதந்திரம்

  உடை சுதந்திரம்

  பெண்கள் என்ன மாதிரியான உடையை அணிய வேண்டும், எந்த மாதிரியான உடை அணிந்து போட்டோ போட வேண்டும் என்பதை அவர்கள் முடிவு பண்ண வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தி அடிமைப்படுத்தும் ஆணாதிக்க மனோபாவம் மாற வேண்டும். நாட்டில் பாலியல் பலாத்காரங்கள் தினமும் நடக்க இந்த மனநிலை தான் காரணம் என அவர் பதிவிட்ட போஸ்ட்டுக்கு பல நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  முன்னாள் மனைவி ஆதரவு

  முன்னாள் மனைவி ஆதரவு

  இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவியான கல்கி கோச்சலின், ஆலியாவின் இந்த பதிவை பார்த்து விட்டு, "இப்படியொரு போஸ்ட்டை நீ போட்டுள்ளதை பார்த்து பெருமைப் படுகிறேன் என ஆலியாவுக்கு சப்போர்ட் செய்துள்ளார். சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான லவ் பண்ணா விட்றணும் கதையில் அஞ்சலியுடன் இணைந்து நடித்தவர் கல்கி கோச்சலின்.

  பிரபலங்கள் ஆதரவு

  பிரபலங்கள் ஆதரவு

  கல்கி கோச்சலினை தொடர்ந்து ஆலியாவின் அம்மாவான தீன் பாண்டே, உனக்கு எப்போதுமே நான் பக்க பலமாக இருப்பேன் என் மகளே என்றும், நடிகை அனன்யா பாண்டேவின் உறவினரான அலானா பாண்டே கிளாப் பண்ணி ஹார்ட்டீன்களையும் போட்டுள்ளார். ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் ஆலியாவின் கருத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

  English summary
  Director Anurag Kashyap daughter Aaliya Kashyap’s sexual assault post getting support from several celebrities.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X