»   »  இதுதான் இப்போதைக்கு "முக்கிய" நியூஸ்... இணையத்தில் ஆலுமா டோலுமா தாண்டிருச்சு 1 கோடி வியூஸ்...!

இதுதான் இப்போதைக்கு "முக்கிய" நியூஸ்... இணையத்தில் ஆலுமா டோலுமா தாண்டிருச்சு 1 கோடி வியூஸ்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ, இணையத்தில் ஒருகோடி பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ஹிட்டடித்த வேதாளம் படத்தில் பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்தன. குறிப்பாக ஆலுமா டோலுமா பாடல் பெரியளவில் பேசப்பட்டது.

இந்தப்பாடல் திரையரங்கில் பார்த்தவர்களை எழுந்து நடனமாடச் செய்தது. அந்தளவு துள்ளலான இசையைக் கொடுத்து அனிருத் அசத்தியிருந்தார்.

வேதாளம்

வேதாளம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, அஸ்வின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் வேதாளம். 2 வது முறையாக சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த இப்படம் கடந்த ஆண்டின் ஹிட் படங்களில் ஒன்றாக மாறியது.

தல தீபாவளி

தல தீபாவளி

கடந்த தீபாவளியன்று வெளியான இப்படத்தை ரசிகர்கள் தல தீபவாளி என்று கொண்டாடி மகிழ்ந்தனர். வேதாளம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரல் ஹிட்டடித்தது.

ஆலுமா டோலுமா

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் ஒருகோடி பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதுவரை இப்பாடலை சுமார் 1,00,09,673 பேர் இணையத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.

கொண்டாடும் ரசிகர்கள்

வழக்கம் போல அஜீத் ரசிகர்கள் இந்த சாதனையை #AalumaDoluma என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி, சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஒரு பாடலின் வரிகள் மட்டும் அடங்கிய வீடியோவை, 1 கோடி ரசிகர்கள் பார்த்து ரசித்திருப்பது தமிழ்த் திரையுலகில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

அனிருத்

படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஆலுமா டோலுமா 1 கோடிகளைக் கடந்ததற்கு நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அஞ்சான்

அஞ்சான்

இதற்கு முன் அஞ்சானில் சூர்யா-சமந்தா நடிப்பில் வெளியான ஏக் தோ தி(1,25,77,517) பாடலின் வீடியோ மற்றும் 3 படத்தில் இடம்பெற்ற வொய் திஸ் கொலைவெறி(1,71,91,947)பாடலின் வீடியோ ஆகியவை இணையத்தில் 1 கோடிகளைத் தாண்டி இருக்கிறது. ஆனால் வெறும் வரிகள் மட்டுமே கொண்ட வீடியோ ஒன்று 1 கோடி பார்வைகளைத் தாண்டி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

English summary
Vedalam - Aaluma Doluma Lyric Video Crossed 1 Crore Views in YouTube. Anirudh Tweeted "1 crore hits for #AalumaDoluma . This song has turned out to be one of my biggest ever. Thanks a million".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil