»   »  அழகான 3 அத்தைகளோடு பொங்கல் கொண்டாடிய ஆம்பள விஷால்

அழகான 3 அத்தைகளோடு பொங்கல் கொண்டாடிய ஆம்பள விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு அத்தையும், அதற்கு அழகான ஒரு பெண்ணும் இருந்தாலே நம்ம இளவட்டங்களுக்கு சந்தோசம் தாங்காது. ஆனால் மூன்று அழகான அத்தைகளும், அவர்களுக்கு அழகு அழகான அத்தை பெண்களும் இருந்தால் கேட்கவா வேண்டும்.

நடிகர் விஷால் குஷியோ குஷியோடு பொங்கல் பண்டிகை கொண்டாடி தீர்த்துள்ளார். ஆம்பள படப்பிடிப்பில்தான் இந்த பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.


விஷால் - ஹன்சிகா

விஷால் - ஹன்சிகா

சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள' படத்தில் விஷால்-ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர்.


மூன்று அத்தைகள்

மூன்று அத்தைகள்

ரம்யாகிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகியோர் இந்த படத்தில் விஷாசின் அத்தையாக நடிக்கின்றனராம். அவர்கள் அனைவருக்கும் மூன்று அழகான பெண்களும் இருக்கிறார்களாம்.


பொங்கல் திருவிழா

பொங்கல் திருவிழா

தை பொங்கல் விடுமுறை நாளில் ஆம்பள படம் ரிலீசாகிறது. எனவே படப்பிடிப்பின் கடைசி நாளில் படக்குழுவினர் ஒன்றாக பொங்கல் பண்டிகை கொண்டாடினார்கள்.புதுப்பானையில் பொங்கல்

புதுப்பானையில் பொங்கல்

பொள்ளாச்சியில் இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. புது மண் அடுப்பில் புதுப்பானை வைத்து நடிகைகள் தீ மூட்டினார்கள். பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு குலவையிட்டனர்.


கரும்பு கடித்த விஷால்

கரும்பு கடித்த விஷால்

ரம்யாகிருஷ்ணன் எல்லோருக்கும் இலையில் பொங்கல் வைத்து வழங்கினார். பிறகு விஷால் ஹன்சிகா உள்ளிட்ட எல்லோரும் ஆளுக்கொரு கரும்பை எடுத்து தின்றனர்.


கையில கரும்பு பிடிங்க

கையில கரும்பு பிடிங்க

இதனையடுத்து ஆளுக்கொரு கரும்பை கையில் பிடித்து போஸ் கொடுத்தனர். இந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை கேமராவில் படம் பிடித்து ‘ஆம்பள' படத்திலும் இணைத்துவிட்டாராம் சுந்தர்.சி.


அப்புறம் என்ன படம் பார்க்கிறப்ப பொங்கல் கொண்டாட்டத்தையும் பாருங்கப்பு.
English summary
Aambala Team Celebration Pongal. Actor Vishal, Actress Hansika Motwani, Madhurima, Kiran and Ramya Krishnan participated in this celebration
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil