»   »  எல்லா பக்கமும் பஞ்சாயத்து தானா..? 'ஆமி' படத்துக்கு தடை கேட்டு வழக்கு!

எல்லா பக்கமும் பஞ்சாயத்து தானா..? 'ஆமி' படத்துக்கு தடை கேட்டு வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகை வித்யா பாலன் குறித்து இயக்குனர் கமல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சென்னை : டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் நடித்திருக்கும் 'ஆமி' திரைப்படத்தை மலையாள ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

முன்னணி நாயகனாக வளர்ந்துவரும் டொவினோ தாமஸ், திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் ஆகியோர் பாக்ஸ் ஆபிஸில் நிகழ்த்தப்போகும் தாக்கம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தப்படத்தில் மாதவிக்குட்டியின் நிஜ வாழ்க்கை சம்பவங்களை இயக்குனர் கமல் திரித்துவிட்டதாகவும் படத்தை திரையிட தடைவிதிக்க வேண்டும் எனவும் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

கமலா தாஸ் வாழ்க்கைக் கதை

கமலா தாஸ் வாழ்க்கைக் கதை

'ஆமி' படத்தில் மஞ்சு வாரியர் வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். 'ஆமி' திரைப்படம் புகழ்பெற்ற கவிஞரும்,எழுத்தாளருமான கமலா தாஸ் என்கிற மாதவிக்குட்டியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளரின் கதை

எழுத்தாளரின் கதை

கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் மாதவிக்குட்டியாக பிறந்து எழுத்தாளராக உருவெடுத்து, 67-வது வயதில் கமலா சுரையாவாக இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பெண்மணியின் சுயசரிதையைத்தான் 'ஆமி' என்கிற பெயரில் படமாக இயக்கியுள்ளார் கமல்.

வாரியர்

'ஆமி' படத்தில் கமலா தாஸ் வேடத்திற்கு முதலில் வித்யா பாலன் நடிக்கவிருந்து, பின்னர் மஞ்சு வாரியர் அந்த கேரக்டருக்கு ஒப்பந்தமானார். இந்தப் படத்தை டைரக்டர் கமல் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

தடைவிதிக்கக் கோரி மனு

தடைவிதிக்கக் கோரி மனு

இந்தநிலையில் இந்தப்படத்தில் மாதவிக்குட்டியின் நிஜ வாழ்க்கை சம்பவங்களை இயக்குனர் கமல் சினிமாவுக்காக திரித்து மாற்றிவிட்டதாகவும், இந்தப்படம் லவ் ஜிஹாத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இப்படத்தை திரையிட தடைவிதிக்க வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் மீதான சர்ச்சை

படத்தின் மீதான சர்ச்சை

"இந்தப்படம் வெளியாவதற்கு முன்பும் வெளியான பின்பும் நிறைய சர்ச்சைகள் வரும். ஆனால் அதை எதிர்நோக்க நான் தயாராக இருக்கிறேன்" என இயக்குனர் கமல் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, ரிலீஸுக்கு முன்பு சிக்கல்களை உருவாக்குவது தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல.

English summary
Malluwood fans are looking forward to the movie 'Aami' starring Tovino Thomas and Manju Warrier. 'Aami' is based on the life of the famous poet and writer Kamala Das. In this case, the case was filed against this film in Kerala High Court, that director Kamal has shattered the real life of kamala das in 'Aami'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil