அஜித்திற்கு அண்ணனா இருப்பார் போல...காலில் காயம்... விடாமல் நடிக்கும் அமீர் கான்
மும்பை : டைரக்டர் அத்வைத் சந்தன் இயக்கும் லால் சிங் சத்தா படத்தில் நடித்து வருகிறார் அமீர் கான். இந்த படத்தை அமிர்கானே தயாரித்து, அவரே நடித்து வருகிறார்.
கரீனா கபுர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி உள்ளட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். 'Forrest Gump'படத்தின் ரீமேக்காக உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் தற்போது நடந்து வருகிறது.
2019 ம் ஆண்டே இந்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டார் அமிர்கான். ஆனால் கொரானா, லாக்டவுன் போன்ற பல பிரச்சனைகளால் இந்த படம் தொடர்ந்து தள்ளி போனது. இதனால் எப்படியும் சொன்னபடி ஆகஸ்ட் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய அமீர்கான் உறுதியாக உள்ளார்.

அமீர் கானுக்கு காலில் காயம்
தற்போது நடந்து வரும் இறுதிக்கட்ட ஷுட்டிங்கில், தொடர்ந்து நீண்ட துரம் ஓடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அதிக நேரம் தொடர்ந்து ஓடியதால் அமீர்கானுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஃபிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வலியுடன் வேடாமல் ஷுட்டிங்
இருந்தாலும் இதுவரை பெயின் கில்லர் மருந்துகள் எதையும் எடுக்க மறுப்பு தெரிவித்து வருகிறார் அமீர்கான். பெயின் கில்லர்களை தவிர்ப்பது மட்டுமில்லாமல், வலியுடன் தொடர்ந்து ஓடி நடித்து வருகிறார். ஏற்கனே கொரோனால் படம் பல ஆண்டுகளாக தாமதமாகி விட்டது. அதனால் இனி ஒரு நிமிடத்தை குட வீணாக்க தான் தயாராக இல்லை என சொல்லி நடித்து வருகிறாராம்.

Mr.Perfectionist ன்னு காட்டிட்டார்
வேலைன்னு வந்தாட்டா வெள்ளைக்காரன் என சொல்வது போல் ஏற்கனவே Mr.Perfectionist என அனைவராலும் பாராட்டப்படுபவர் அமீர்கான், வேலையில் தான் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருப்பவர் என்பதை மீண்டும் அவர் நிருபித்துள்ளார். இது சாதாரண விஷயம் இல்லை என்றலும் வலியை பொறுத்துக் கொண்டு தொடர்ந்து ஓடும் காட்சிகளில் தனது பெஸ்ட்டை கொடுத்து அனைவரையும் மிரள வைத்து வருகிறார் அமீர் கான்.

அஜித்தையே மிஞ்சிட்டாரே
சமீபத்தில் அஜித் தான் வலிமை ஷுட்டிங்கின் போது, பைக்கில் சென்று விழும் காட்சிகளில் ரத்த காயம் ஏற்பட்ட போதும் விடாமல் நடித்தார். அதுவும் ஆபத்தான சீன்களிலும் டுப் போட மறுத்து தானே நடித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அமீர்கான் அஜித்தையே மிஞ்சி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இது மைல் கல்லாக அமையும்
அவரது கடினமான அர்ப்பணிப்பு உணர்வு உழைப்பிற்கு பலனாக இந்த படம் நிச்சயம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மைல் கல்லாக அமையும் என சொல்லப்படுகிறது.இந்த படம் எப்போது ரிலீசாகும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











