»   »  ரஜினி ஐடியாவை ஃபாலோ செய்த ஆமிர் கான்.. ஆனா, அவரை விட அதிகம்!

ரஜினி ஐடியாவை ஃபாலோ செய்த ஆமிர் கான்.. ஆனா, அவரை விட அதிகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வரலக்ஷ்மி மற்றும் அமீர் கான் பற்றிய தகவல்கள்- வீடியோ

சென்னை : ரஜினியைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகரான ஆமிர் கானும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்த அவர் தனது அம்மாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ட்விட்டரில் மட்டுமே எப்போதாவது ஆக்டிவ்வாக இருந்த ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்தார். இணைந்த ஒரு சில நாட்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.

Aamir khan joins instagarm

இந்நிலையில், பாலிவுட் நடிகரான ஆமிர் கானும் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன் தினம் முதல் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். நேற்று முன்தினம் தொடங்கிய இன்ஸ்டாகிராமில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர். ரஜினியை ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கை இன்னும் 3 லட்சத்தையே தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ட்விட்டரில் 23 மில்லியன் பேரும், ஃபேஸ்புக்கில் 15 மில்லியன் பேரும் ஆமிர் கானை ஃபாலோ செய்கின்றனர். தனது படம் குறித்த தகவல்களையும், யாரும் அதிகமாகப் பார்க்காத புகைப்படங்களையும் இனி அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

English summary
Following Rajini, Bollywood actor Aamir Khan joined the Instagram. He joined in Instagram and shared his mother's photo. His Instagram page, which started recentlyy, has over 5 lakhs followers so far.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X