Don't Miss!
- News
நெருங்கும் காதலர் தினம்.. 9.5 கோடி காண்டம்களை இளசுகளுக்கு இலவசமாக தரும் தாய்லாந்து! அலைமோதும் கூட்டம்
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எனக்கு எண்டே கிடையாது.. கேஜிஎஃப் இயக்குநர் படத்தில் இணைகிறாரா அமீர்கான்.. பரபரக்கும் தகவல்!
ஹைதராபாத்: தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான், லால் சிங் சத்தா என அடுத்தடுத்து இரு பெரிய படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், நடிகர் அமீர்கான் திடீரென சினிமாவை விட்டு விலகி குடும்பத்துடன் நேரத்தை செலவிடப் போகிறேன் என அதிரடியாக சொன்னது பாலிவுட்டை மட்டுமின்றி இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், கேஜிஎஃப் படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் படத்தில் அமீர்கான் நடிக்கப் போவதாக அதிரடி தகவல் ஒன்று அனல் பறக்கிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான் மீண்டும் வந்தால் செம வெயிட்டான படத்தில் தான் வரவேண்டும் என முடிவெடுத்துள்ளாரா? அதனால் தான் கேஜிஎஃப் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கப் போகிறாரா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.
காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்.. அடேங்கப்பா சரியான புளியங் கொம்பு தான் போல!

அப்செட்டான அமீர்கான்
ஜானி டெப்பின் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தை போலவே உருவான தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படம் டைட்டானிக் கப்பல் போல மூழ்கி விட்ட நிலையில், ஹாலிவுட்டில் ஏகப்பட்ட ஆஸ்கர்களை அள்ளிய டாம் ஹேங்க்ஸின் ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் உரிமை எல்லாம் வாங்கி ரொம்பவே உடல் எடையை குறைத்தும் கூட்டியும் பல இடங்களுக்கு இந்த வயதில் ஓடாத ஓட்டம் ஓடி எடுத்த லால் சிங் சத்தா படமும் படு தோல்வியை சந்தித்த நிலையில், ரொம்பவே அப்செட் ஆகி விட்டார் அமீர்கான்.

சினிமாவிலிருந்து ஓய்வு
190 கோடி ரூபாய் வரை செலவு செய்து எடுத்த அந்த படம் 100 கோடி கூட வசூல் செய்யாமல் அதள பாதாளத்திற்கு சென்ற நிலையில், கடுப்பான தங்கல் நாயகன் அமீர்கான் இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதே இல்லை என்கிற முடிவுக்கே வந்து திடீரென சினிமாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கப் போகிறேன் என அறிவித்து அதிர்ச்சியை கொடுத்து விட்டார்.

ஒரேயடியாக இல்லை
பாலிவுட்டை காப்பாற்றி வந்த மூன்று கான்களில் ஒரு கான் திடீரென இப்படி சொன்னால் எப்படி என பதறியடித்துக் கொண்டு பல பிரபலங்களே அமீர்கானுக்கு நெருகக்டி கொடுத்த நிலையில், ஒரேயடியாக இல்லை, கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன், ரொம்ப ஓடிட்டேன் என்பது போல விளக்கம் கொடுத்து தனது சினிமா கரியருக்கு கமா போட்டுள்ளார்.

கேஜிஎஃப் இயக்குநருடன் கூட்டணி
லால் சிங் சத்தா படத்திலேயே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை நடிக்க வைத்த அமீர்கான், அடிக்கடி டோலிவுட்டுக்கு வந்து செல்கிறார். இந்நிலையில், தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து பிரம்மாண்டமாக சலார் படத்தை உருவாக்கி வரும் கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் படத்தில் அமீர்கான் நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜூனியர் என்டிஆர் படத்தில்
ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் உடன் இணைந்து நடித்த ஜூனியர் என்டிஆர் அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்நிலையில், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படமாக உருவாகப் போவதாகவும் கூறுகின்றனர். அமீர்கான் மீண்டும் நடித்தால் தரமான சம்பவம் செய்ய வேண்டும் என்கிற முடிவில் உள்ள நிலையில், பிரசாந்த் நீல் படம் அதற்கு சரியான ஒன்றாக இருக்கும் என அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.