»   »  இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் 'ராகேஷ் ஷர்மா' வாழ்க்கை வரலாற்றில்... ஆமிர்கான்?

இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் 'ராகேஷ் ஷர்மா' வாழ்க்கை வரலாற்றில்... ஆமிர்கான்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்றில், ஆமிர்கான் நடிக்கப் போவதாக தகவல்கள் அடிபடுகின்றன.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஆமிர்கான் தற்போது மல்யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட டங்கல் படத்தில் நடித்து வருகிறார்.

Aamir Khan Play Rakesh Sharma Biopic

பிரபல இந்திய குத்துச்சண்டைய வீரர் மகாவீர் சிங் போகத்தின், வாழ்க்கை வரலாற்றுப் படமான டங்கலில் 2 பெண் குழந்தைகளுக்குத் தந்தையாக ஆமிர்கான் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், ஆமிர்கான் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விண்வெளி வீரர் வேடத்தில் ஆமிர்கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகப் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ம் தேதி விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட ராகேஷ் சர்மா, இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் என்று இந்தியர்களால் கொண்டாடப்படுகிறார்.

English summary
Sources said Aamir Khan Play a Space Guy in His Next.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil