மனநலத்தை காக்கும் அகத்சு பவுண்டேஷன்... அமீர்கான் மகளின் புதிய முயற்சி!
மும்பை : கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தற்போது கடினமான சூழல் நிலவி வருகிறது.
மக்கள் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மனதளவில் மிகுந்த உளைச்சலுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களின் மனநிலையை பராமரிக்கும்வகையில் அமீர்கானின் மகள் ஐரா கான் அகத்சு பவுண்டேஷனை துவக்கியுள்ளார்.

மன உளைச்சல்
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பால் மக்கள் அனைவரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு அவர்களிடம் மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஒருவரையொருவர் நேரடியாக எதிர்கொள்ளவும் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் நம்பிக்கையின்மை
அக்கம் பக்கத்து வீட்டினரையும் அந்நியமாக பார்க்கும் மனநிலை உருவாகியுள்ளது. கொரோனாவை எதிர்கொள்வதை காட்டிலும் இந்த மனநிலையுடன் யாரையும் நம்ப முடியாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள மிகுந்த சிரமத்தை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

அகத்சு பவுண்டேஷன்
இந்த சூழ்நிலையை எளிதாக்க அமீர்கானின் மகள் ஐரா கான் தற்போது அகத்சு பவுண்டேஷனை துவக்கியுள்ளார். இதன்மூலம் வாழ்க்கையை எளிதாக்கும் வழிமுறைகளை மக்களின் மனங்களில் புகுத்தவுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
முதல் முயற்சி
அகத்சு என்றால் தன்னையே ஜெயிப்பது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இதன்மூலம் நம்முடைய நலனையும் பாதுகாத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு இந்த பவுண்டேஷன் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தன்னுடைய முதல் முயற்சி என்றும் மக்களுக்கு மன நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதல் நோக்கம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











