»   »  சீனாவில் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த ஆமீரின் பி.கே.: ரூ.100 கோடி வசூல்

சீனாவில் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த ஆமீரின் பி.கே.: ரூ.100 கோடி வசூல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் ரிலீஸான 16 நாட்களில் ஆமீர் கானின் பி.கே. படம் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

ராஜ்குமார் ஹிரானி தயாரித்து, இயக்கிய படம் பி.கே. ஆமீர் கான் கையில் ஒரு டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு நிர்வாணமாகப் போஸ் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் தான் பி.கே. அந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி ஆளாளுக்கு வழக்கு தொடர்ந்தனர்.

வழக்குகளின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க படத்தின் வசூல் மறுபக்கம் அதிகரித்தது.

ரூ.600

ரூ.600

ஆமீர் கான், அனுஷ்கா சர்மா நடித்த பி.கே. படம் இந்தியாவில் ரூ.330 கோடிக்கு மேல் வசூலித்தது. மேலும் உலக அளவில் ரூ.630 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதன் மூலம் உலக அளவில் அதிகம் வசூல் செய்த பாலிவுட் படம் என்ற பெருமையை பி.கே. பெற்றது.

ஆமீர் கான்

ஆமீர் கான்

பி.கே. படத்தை பார்த்தவர்கள் எல்லாம் பல நாட்களுக்கு வாய் வலிக்க வலிக்க ஆமீர் கானின் அசத்தலான நடிப்பை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர். ஆமீர் படத்திற்கு படம் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார் என்று ரசிகர்கள் பேசினர்.

சீனா

சீனா

கடந்த மாதம் 22ம் தேதி சீனாவில் பி.கே. படம் ரிலீஸ் செய்யப்பட்டது. 4 ஆயிரத்து 600 திரைகளில் வெளியிடப்பட்ட படம் ரிலீஸான 16 நாட்களிலேயே ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சாதனை

சாதனை

வெளிநாடு ஒன்றில் பாலிவுட் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். ஆமீர், ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோர் சீனா சென்று அங்கு 3 நாட்கள் தங்கி படத்தை விளம்பரம் செய்தது வீண் போகவில்லை.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

பிற உட் படங்கள் சில கோடிளை வசூலிக்க கஷ்டப்படுகையில் பாலிவுட் படங்கள் சுலபமாக ரூ.100 கோடியை வசூலித்து வருகின்றன. அண்மையில் ரிலீஸான மாதவன், கங்கனா நடித்த தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ், பிக்கு ஆகிய படங்கள் தலா ரூ.100 கோடி வசூலித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: china pk சீனா பிகே
English summary
Aamir Khan's PK movie which got released in 4,600 screens in China has collected Rs. 100 crore in just 16 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil