twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “வீடும் இல்லாம பணமும் இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கோம்”: அப்பா குறித்து மனம் திறந்த அமீர்கான்

    |

    மும்பை: அமீர் கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் வரும் 11ம் ( நாளை ) தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    அமீர் கானுடன் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.

    இந்நிலையில், 'லால் சிங் சத்தா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனது குடும்பம் குறித்தும் அப்பாவைப் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.

    சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் பிரபல யூடியூபர்.. யாருன்னு தெரியுமா! சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் பிரபல யூடியூபர்.. யாருன்னு தெரியுமா!

    பாலிவுட்டின் டாப் ஹீரோ

    பாலிவுட்டின் டாப் ஹீரோ

    பாலிவுட்டில் முன்னணி நடிகரான அமீர்கான், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார். இவரது படங்களுக்கு இந்தியில் மட்டும் இல்லாமல் இந்தியளவிலும் உலகளவிலும் பெரிய எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. அதேபோல் அமீர் கான் தற்போது நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படத்துக்கும் அதிக எதிபார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படம் நாளை (ஆக.11) திரையரங்குகளில் வெளியாகிறது.

    வெற்றி பெறுமா லால் சிங் சத்தா?

    வெற்றி பெறுமா லால் சிங் சத்தா?

    ஹாலிவுட்டில் 1994ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது 'லால் சிங் சத்தா.' கண்டிப்பாக இந்தப் படம் அமீர் கானுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்கும் என கூறப்படுகிறது. ஆனாலும், இதுவரை 'லால் சிங் சத்தா' படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் குறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், 'லால் சிங் சத்தா' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

    அப்பா குறித்து மனம் திறந்த அமீர்கான்

    அப்பா குறித்து மனம் திறந்த அமீர்கான்

    இந்நிலையில், 'லால் சிங் சத்தா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமீர்கான், சிறுவயதில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். "என் தந்தை சினிமா தயாரிப்பாளராக இருந்தால், நாங்கள் மிகவும் வசதியாக இருந்ததாக நினைக்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை. என் அப்பா நல்ல தரமான படங்களை தயாரித்திருந்தாலும், அவர் பெரிதாக பணம் சம்பாதிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    தலைக்கு மேல் கடன் இருந்தது

    தலைக்கு மேல் கடன் இருந்தது

    "1986ல் வெளியானத தனது 'Locket' படத்தை தயாரிக்க 8 வருடங்கள் வரை காத்திருந்ததாகவும், அந்த நேரத்தில் எங்களுக்கு தலைக்கு மேல் கடன் இருந்ததாகவும்" கூறியுள்ளார். மேலும், "அப்போது கடனுக்காக 36% வட்டி கட்ட வேண்டியிருந்தால், மிகவும் சிரமப்பட்டதாகத்" தெரிவித்துள்ளார். அதோடு, "பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஃபீஸ் கட்டாத மாணவர்கள் லிஸ்ட்டில் பல முறை எனது பெயர் இருந்ததாகவும்" அமீர்கான் கூறியுள்ளார்.

    அமீர்கான் டென்னிஸ் ப்ளையேர்

    அமீர்கான் டென்னிஸ் ப்ளையேர்

    தொடர்ந்து பேசிய அமீர்கான், "சின்ன வயதில் எனக்கு டென்னிஸ் விளையாட்டு பிடிக்கும் என்றும், பல போட்டிகளில் பங்கேற்று அதில் கிடைக்கும் பணத்தை எனது அம்மாவிடம் கொடுத்து, குடும்பத்தில் இருந்த வறுமையை சரிசெய்ததாகவும்" பேசியுள்ளார். அமீர் கானின் இந்த பேட்டி, அவரது ரசிகர்களை ரொம்பவே எமோஷனலாக்கியுள்ளது.

    English summary
    Aamir Khan says his family was almost homeless, also he opens up about his father
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X