»   »  பாகுபலியை இன்னும் நான் பார்க்கவே இல்லையே!- ஆமிர்கான்

பாகுபலியை இன்னும் நான் பார்க்கவே இல்லையே!- ஆமிர்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி, தங்கல் இரு படங்களையுமே ஒப்பிட வேண்டாம்.. பாகுபலியை இன்னும் பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார் ஆமிர்கான்.

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'தங்கல்'. இப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்தது. ரூ.700 கோடியை வசூலித்தது.

Aamir Khan still not watch Baahubali 2

இந்த சாதனையை சமீபத்தில் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படம் முறியடித்து ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு 'தங்கல்' படம் சீனாவில் வெளியானது. அங்கேயும் வசூல் சாதனை தொடர்கிறது. அங்கு ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் பாகுபலியின் வசூல் சாதனையை நெருங்கிக் கொண்டுள்ளது தங்கல்.

'தங்கல்' படத்தின் வசூல் சாதனையை அடுத்து, 'பாகுபலி-2' படம் வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளது. எனவே பாகுபலியுடன் தங்கலை தொடர்ந்து ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆமீர்கான் பேசுகையில், "தங்கல் படம் சீனா மற்றும் உலக அளவில் இந்த அளவிற்கு பாராட்டுக்களை பெற்று வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் படங்களில் எந்தவொரு ஒப்பீடும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. 'தங்கல்',
'பாகுபலி-2' ஆகிய இரண்டு படங்களும் நாட்டிற்கு பெருமை சேர்த்த நல்ல படங்கள்.

நான் இன்னும் 'பாகுபலி-2' பார்க்கவில்லை. மிகவும் வெற்றிகரமான படம். அந்தப் படத்தைப் பற்றி பல நல்ல செய்திகளைக் கேட்டு வருகிறேன்," என்றார்.

English summary
Dangal hero Aamirkhan says that there is no need for comparing Baahubali and Dangal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil