»   »  சன்னி லியோனுக்கு நன்றி தெரிவித்த அமீர் கான்

சன்னி லியோனுக்கு நன்றி தெரிவித்த அமீர் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சர்ச்சைகளின் நாயகி என்று பெயரெடுத்த சன்னி லியோனுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார்.

நகைச்சுவையாகவும் மற்றவர்களிடம் நாகரிகமாகவும் நடந்து கொள்ளக் கூடிய நடிகர் அமீர்கான். சன்னி லியோன் விஷயத்தில் இதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் அமீர்கான்.

தங்கால் படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்த அமீர் கான் அதே தோற்றத்துடன் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் தோன்றினார். இதனைப் பார்த்த சன்னி லியோன் அமீரைப் பாராட்ட, பதிலுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் அமீர் கான்.

சன்னி லியோன்

தான் நடிக்கும் படங்களாலும் தனது பேட்டிகளாலும் உலகளவில் புகழ் பெற்றவர் நடிகை சன்னி லியோன். சமீபத்தில் சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் அமீர் கானை பின்வருமாறு பாராட்டியிருக்கிறார் " அமீர் கான் சமீபத்தில் நீங்கள் நடித்த விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன், மிகவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் குண்டாக இருந்தாலும் ஒல்லியாக இருந்தாலும் நீங்கள் எப்போதும் அழகுதான் லவ் யூ" என்று கூறியிருக்கிறார்.

நன்றி தெரிவித்த அமீர்கான்

சன்னி லியோனின் இந்தப் பாராட்டிற்கு "நன்றி சன்னி லியோன். நீங்கள் மிகவும் அன்பானவர்" என்று பதிலளித்திருக்கிறார் அமீர்கான்.

தங்கால்

தங்கால்

தற்பொழுது தான் நடித்து வரும் தங்கால் படத்திற்காக சுமார் 35 கிலோ உடல் எடையை ஏற்றி நடித்துக் கொண்டிருக்கிறார் அமீர்கான். இந்தத் தோற்றத்துடன் அவர் ஸ்நாப் டீல் விளம்பரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுப் படங்களின் வரிசையில்

விளையாட்டுப் படங்களின் வரிசையில்

வால்ட் டிஸ்னி தயாரிப்பில்,நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் மல்யுத்த வீரர் மகாவீர் சிங்க் போகத்தின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு உருவாகிவருகிறது. தனது இரண்டு மகள்களுக்கும் மல்யுத்தம் கற்றுத் தந்த தந்தைப் பற்றிய கதை தான் "தங்கால்". இப்படத்தை 2016, டிசம்பர் 23 தேதி ரிலீஸ் செய்யும் திட்டத்தில் படக்குழு உள்ளனர்.சக் தே இந்தியா, மேரி கோம், அசார் வரிசையில் பாலிவுட்டின் அடுத்த விளையாட்டு வீரம் சார்ந்த பயோபிக் படமாக தங்கால் உருவாகி வருகிறது.

English summary
Sunny Leone tweeted, “Hey aamir_khan saw you in the Snapdeal Ad. Motte or not, you still look hot! Love you". Aamir Khan’s end to SunnyLeone’s compliment, “Thank you SunnyLeone, you are too kind. Love a.”

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil