»   »  மீண்டும் 'கஜினி' கூட்டணிக்கு ரெடியாகும் முருகதாஸ்: ஆனால் சூர்யாவோட இல்லை

மீண்டும் 'கஜினி' கூட்டணிக்கு ரெடியாகும் முருகதாஸ்: ஆனால் சூர்யாவோட இல்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் ஆமீர் கானை வைத்து படம் எடுக்க விரும்புகிறார்.

சூர்யாவை வைத்து கஜினி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். இந்தியில் சூர்யா கதாபாத்திரத்தில் ஆமீர் கான் நடித்தார். படம் ரூ.100 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் ஆமீர் கான் பற்றி முருகதாஸ் கூறுகையில்,

ஆமீர் கான்

ஆமீர் கான்

ஆமீர் கான் தான் நடிக்கும் படங்கள் அனைத்தும் சிறப்பாக வர வேண்டும் என மெனக்கெடுவார். அதனால் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வார். நான் தற்போது தெற்கில் பிசியாக உள்ளேன். அதனால் இருவரும் சேர்ந்து பணியாற்ற இது சரியான நேரம் இல்லை.

படம்

படம்

நான் அண்மையில் ஆமீர் கானை சந்தித்து பேசினேன். சார், நாம் மீண்டும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று அவரிடம் கேட்க டேட்ஸ் சரியாக இருந்தால் தாராளமாக பண்ணலாம் என்றார். நான் மறுபடியும் அவரை இயக்குவேன்.

ஆமீர் சிக்ஸ் பேக்

ஆமீர் சிக்ஸ் பேக்

ஆமீரின் தங்கல் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்தேன். கஜினிக்காக உடம்பை கும்மென்று ஆக்கினார் ஆமீர். பின்னர் தூம் 3 படத்திலும் செமயாக இருந்தார். அண்மையில் அவரின் தங்கல் சிக்ஸ் பேக் புகைப்படத்தை பார்த்தேன்.

முடியாது

முடியாது

நான் ஆமீரை சந்தித்தபோது அவர் வயதான கதாபாத்திரத்திற்காக குண்டாக இருந்தார். இவர் மறுபடியும் ஒல்லியாக மாட்டார் என நினைத்தேன். ஆனால் என்ன ஆச்சரியம் உடம்பை குறைத்து கும்மென்று ஆகிவிட்டார். ஆமீரால் மட்டுமே இப்படி எல்லாம் முடியும். தங்கல் நிச்சயம் ஹிட்டாகும்.

English summary
Actor Aamir Khan may team up with with director A R Murgadoss's again after their last outing "Ghajini". Murgadoss says he recently met the actor and they discussed about a possible collaboration in future.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X