»   »  என் உயரத்துக்கு கர்ணன் வேஷம் பொருந்ததாது... கிருஷ்ணர் ஓகே! - ஆமிர் கான்

என் உயரத்துக்கு கர்ணன் வேஷம் பொருந்ததாது... கிருஷ்ணர் ஓகே! - ஆமிர் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திய சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர்களுள் ஒருவர் ஆமீர்கான். அவரோ 'நான் ராஜமௌலியின் தீவிர ரசிகன், அவர் இயக்கும் படத்தில் நடிக்க நான் விரும்புகிறேன் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' க்கு பிறகு இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் முதலாவதாக இடம் பிடித்துவிட்டார் ராஜமௌலி. அவர் படத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Aamir Khan wants to play as Lord Krishna

ஆமிர்கானுக்கும் இயக்குநர் ராஜமௌலியின் படத்தில் நடிப்பதற்கு ஆசை வந்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'ராஜமௌலி இயக்கும் மகாபாரதம் கதையில் நடிக்க விரும்புகிறேன். மகாபாரதத்தில் எனக்கு இரண்டு கதாபாத்திரங்கள் பிடிக்கும். ஒன்று கர்ணன், மற்றொன்று கிருஷ்ணன். கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க நல்ல உயரமான உடல்வாகு இல்லையென்று எனக்கு தோன்றுவதால் கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன்,' என்று தெரிவித்துள்ளார்.

English summary
Aamir Khan wants to play lord Krishna role, whether SS Rajamouli makes a movie based on Mahabharatha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil