»   »  சீன பாக்ஸ் ஆபீஸில் பேயாட்டம் ஆடி 5 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த சூப்பர்ஸ்டார் படம்

சீன பாக்ஸ் ஆபீஸில் பேயாட்டம் ஆடி 5 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த சூப்பர்ஸ்டார் படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ஆமீர் கானின் தங்கல் படம் சீனாவில் ரிலீஸான ஐந்தே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

ஆமீர் கான் மல்யுத்த வீரராக நடித்த தங்கல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் அவரின் மகள்களாக நடித்த பாத்திமா சனா ஷேக் மற்றும் சானியா மல்ஹோத்ரா ஆகியோர் பெயரும், புகழும் பெற்றனர்.


இந்நிலையில் தங்கல் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது.


சீனா

சீனா

தங்கல் படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு மற்றும் சீன சப் டைட்டில்களுடன் என இரு வகையாக சீனாவில் சுமார் 7 ஆயிரம் தியேட்டர்களில் கடந்த 5ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.


தங்கல்

தங்கல்

தங்கல் படம் சீனாவில் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 13.19 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் படம் ரிலீஸான ஐந்தே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.


பி.கே.

பி.கே.

ஆமீர் கான், அனுஷ்கா சர்மா நடித்த பி.கே. படமும் சீனாவில் முன்பு ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த படம் ஒரு மாதத்தில் ரூ.100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


சீனர்கள்

சீனர்கள்

தங்கல் படத்தில் ஒரு தந்தை தனது மகள்கள் மீது அதீத நம்பிக்கை வைத்து அவர்களை வெற்றியாளர்களாக ஆக்க போராடுவது தான் சீனர்களை மிகவும் கவர்ந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


English summary
Superstar Aamir Khan's Dangal is having a dream run at the box office in China and has already grossed 120 million yuan, (about USD 19 million) in five days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil