»   »  ஆமீர் கானால் கமல் ஹாஸனுக்கு கிடைக்காமல் போன ஜாக்பாட்

ஆமீர் கானால் கமல் ஹாஸனுக்கு கிடைக்காமல் போன ஜாக்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தங்கல் படத்தில் நடிக்க ஆமீர் கான் மறுத்திருந்தால் அந்த வாய்ப்பு கமல் ஹாஸன் அல்லது மோகன்லாலுக்கு சென்றிருக்கும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ஆமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படம் பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக உள்ளது. படம் கோடி, கோடியாக வசூலித்துக் கொண்டிருக்கிறது.

படம் மும்பையில் மட்டுமே ரூ.100 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமீர் கான்

ஆமீர் கான்

தங்கல் படத்தில் நடிக்க ஆமீர் கான் மறுத்திருந்தால் மோகன்லால் அல்லது உலக நாயகன் கமல் ஹாஸனை அவரின் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கமல்

கமல்

தங்கல் படத்தில் கமல் அல்லது மோகன்லாலை நடிக்க வைக்கும் திட்டம் இருந்ததாக யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவன தலைவர் திவ்யா ராவ் தெரிவித்துள்ளார்.

மோகன்லால்

மோகன்லால்

மோகன்லால் ஒரு காலத்தில் மல்யுத்த போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். அதனால் மல்யுத்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தங்கலுக்கு அவரை தேர்வு செய்ய திட்டமிட்டனர்.

உலக நாயகன்

உலக நாயகன்

உலக நாயகன் கமல் ஹாஸன் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அதனால் தங்கலில் அவரை நடிக்க வைத்திருந்தால் நிச்சயம் அசத்தியிருப்பார்.

English summary
UTV motion pictures head Divya Rao said that if Aamir Khan refused to act in Dangal, that offer would have gone to either Kamal Haasan or Mohanlal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil