»   »  இணையத்தில் லீக்கான ஆமிர்கானின் புதுப்பட கெட்டப் - அசந்துபோன ரசிகர்கள்

இணையத்தில் லீக்கான ஆமிர்கானின் புதுப்பட கெட்டப் - அசந்துபோன ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : ஆமீர்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'தங்கல்' படம் வசூல் புரட்சியே செய்துவிட்டது. இப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 2000 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது.

இந்நிலையில் ஆமீர்கான் 'டங்கல்' படத்தை அடுத்து 'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆமீர்கான் மட்டுமின்றி அமிதாப் பச்சனும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இருவரும் சேர்ந்து நடிப்பது இதுவே முதல்முறை.

Aamirkhan's latest getup pic leaked on internet

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதைக்கண்ட பலரும் ஆமீர்கான், அமிதாப் பச்சன் ஆகியோரின் கெட்டப்பை பார்த்து அதிர்ச்சி ஆகியுள்ளனர்.

'3 இடியட்ஸ்' படத்தில் கல்லூரி மாணவராக நடிப்பதற்காக வெகுவாக உடல் எடையைக் குறைத்த ஆமிர்கான், 'டங்கல்' படத்திற்காக மீண்டும் எடையை அதிகாரித்தார். படத்துக்கு ஏற்றபடி கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலமைப்பை மாற்றும் ஆமிர்கான் இந்தப் படத்தில் ஆளே மாறி இருக்கிறார்.

English summary
Aamir Khan is playing 'Thugs of Hindostan' after the movie 'Dangal'. Amitabh Bachchan also plays an important role in this film. A photo taken on the film's shoot is leaked on the Internet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil