தனுஷ் பட டைரக்டர் இயக்குகிறார்.. உருவாகிறது விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்.. யார் நடிக்க போறாங்க?

By

சென்னை: பிரபல செஸ் சாம்பியன் விஸ்நாதன் ஆனந்தின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது.

பயோபிக் படங்களுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருப்பதால், பிரபலங்களின் வாழ்க்கை கதை அதிகமாக சினிமாவாகி வருகிறது.

விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன.

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம்

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதை 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் உருவாகி சூப்பர் ஹிட்டானது. இதில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை, சூரரைப் போற்று என்ற பெயரில், சூர்யா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்றுள்ளது.

வாழ்க்கை கதைகள்

வாழ்க்கை கதைகள்

இப்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை, 'தலைவி' என்ற பெயரில் உருவாகி வருகிறது. மேலும் கர்ணம் மல்லேஸ்வரி, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உட்பட பலரின் வாழ்க்கை கதைகள் படமாக்கப்பட்டு வருகிறது.

விஸ்வநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த்

இந்நிலையில், இப்போது ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற, தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டரான ஆனந்த், இரண்டாயிரமாவது ஆண்டில், முதல் தடவையாக உலக சாம்பியன் ஆனார்.

சாதனை படைத்தார்

சாதனை படைத்தார்

பின்னர் 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை தொடர்ந்து வென்று சாதனை படைத்தார். அவருடைய சுயசரிதை, மைண்ட் மாஸ்டர் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து, அவருடைய பயோபிக் உருவாக இருக்கிறது.

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, இந்தி பட இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்குகிறார். இந்தப் படத்தை மகாவீர் ஜெயினும் ஆனந்த் எல்.ராயும் இணைந்து தயாரிக்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்தாக யார் நடிக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Recommended Video

4 முதல்வர்களுக்கு சம்பளம் கொடுத்த குடும்பம் | ALS PRODUCTION |REWIND RAJA EP-04 | FILMIBEAT TAMIL
அட்ரங்கி ரே

அட்ரங்கி ரே

இயக்குனர் ஆனந்த் எல்.ராய், தொடி லைஃப் தொடா மேஜிக், தனுஷ் நடித்த ராஞ்ஜனா, தனு வெட்ஸ் மனு, ஷாரூக்கானின் ஸீரோ உட்பட பல இந்தி படங்களை இயக்கியவர். இப்போது, தனுஷ், அக்‌ஷய்குமார், சாரா அலிகான் நடிக்கும் அட்ரங்கி ரே என்ற படத்தை இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X