»   »  ஆண்டவன் கட்டளையும் ரசிகர்களின் பத்து கமெண்டுகளும்!.. #AandavanKattalai #VijaySethupathi

ஆண்டவன் கட்டளையும் ரசிகர்களின் பத்து கமெண்டுகளும்!.. #AandavanKattalai #VijaySethupathi

Posted By:
Subscribe to Oneindia Tamil

1. போலி விசாவில் லண்டன் செல்ல விஜய் சேதுபதி முயன்றாலும், படத்தின் நாயகனை கடைசி வரை நல்லவராகவும் குடி, புகை பழக்கம் இல்லாதவராகவும் காட்டி ..படத்தின் கடைசி வரை குடி காட்சி இல்லாமல் கொடுத்தது.. (பொதுவாகவே ஹீரோ போலவே தன்னை நினைத்து கொள்ளும் தமிழக இளைஞர்களுக்கு இது தேவையான ஒன்று)

2. பொது இடத்தில அடுத்தவன் பேசுவதை ஒட்டு கேட்பதே தப்பு.. இதுல அறிவுரை வேறவா? என எதிர்ப்பையும் நாசுக்காக பதிவு செய்தது.


Aandacvan Kattalai and fan's comments

3. சென்னையில் நடக்கும் வீட்டு வாடகை கொள்ளையையும், வீட்டு உரிமையாளர்கள் போடும் கட்டுப்பாடுகளையும் அவர்களின் அராஜகங்களையும் தோலுரித்து காட்டியது.


4. கேரக்டர் தேர்வு.. ரித்திகா சிங், யோகி பாபு, நாசர், எஸ்எஸ் ஸ்டானிலி, ஏ.வெங்கடேஷ், நமோ நாராயணன், விசாரணை அதிகாரியாக வரும் மலையாள நடிகர் ஹரீஷ் பெராடி, இலங்கை தமிழராக நடித்திருப்பவர், கடைசியாக.. பொதுவாகவே எனக்கெல்லாம் சிங்கம் புலி.. கத்தி கத்தி பேசியே காண்டு ஆக்குவார் என்பதால், அவரை பார்த்தாலே எரிச்சல்தான் வரும் .. ஆனால் அவரையே ரசிக்கும் படி படமாக்கியது... விஜய் சேதுபதி இல்லாமல் இந்த படம் இந்த நிறைவைக் கொடுத்திருக்க முடியாது .. அவரை கதை நாயகனாக தேர்வு செய்தது முக்கிய ப்ளஸ்.


5. தமிழ் , தமிழ் பண்பாடு என பேசி அரசியல் செய்பவர்கள் உண்மையில் அவர்களின் வாரிசுகளே அப்படி இல்லை என சவுக்கடி கொடுத்தது.


6. புகை பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும். குடி குடியை கெடுக்கும் என்ற வாசகம் படம் எங்கிலும் இல்ல என்ற போதும்.. 'ஹெல்மெட் போடுவது உயிருக்கு பாதுகாப்பு'
என போட்டு தலைக்கவசத்தின் அவசியத்தை உணர்த்தியது.


7. பாஸ்போர்ட் வாங்குவதிலும் நீதிமன்றங்களிலும் நடக்கும் தில்லுமுல்லுகளை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் புரிய வைத்து... அரசு அலுவலகங்களில் பொதுவாக புரோக்கர்களை நம்பாதீர்கள் என பொட்டில் அடித்தாற்போல் சொல்லியது.


8. இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றால் அகதிகளாக அவர்கள் நம்மை சேர்த்து கொண்டு ராஜா போன்று வாழ வைப்பார்கள்.. ஆனால் இந்தியாவில் கூண்டில் அடைப்பது போன்று தான் அடைத்து வைப்பார்கள் என இலங்கை தமிழர்களின் உண்மை நிலையை உணர்த்தியது.


9. 'கெட்ட பசங்கடா.. அவனுங்க' என.. இலங்கையில் தமிழர்கள் மாட்டினால் தமிழர்களின் கதி என்ன என்பதை ..யோகி பாபுவின் உடல் காயங்கள் மூலம் உணர்த்தியது.


10. கடைசியாக ஒரு படம் பார்த்தா.. கொஞ்சமாவது நல்ல உணர்வு வரணும்.. மகிழ்ச்சி கிடைக்கணும்.. இது இரண்டும் கொடுத்து சந்தோமா போயிட்டு வாங்க என மக்களை பாதுகாப்பா வீட்டுக்கு அனுப்பி வச்சது..!


-இப்படி பத்து நல்ல விஷயங்கள் இருந்தாலும் படத்தில் உள்ள ஒரு கெட்ட விஷயம் படத்தின் நத்தை வேகம். அதையும் சரி பண்ணியிருந்தால்.. ஆண்டவன் கட்டளையை ரசிகர்கள் அப்படியே ஏற்றிருப்பார்கள். ப்ச்!


Viewers rating... 2.5/5.0


-கேஎஸ்கே செல்வா

English summary
Here is viewer's comments on Vijay Sethupathy's Aandavan Kallai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil