»   »  பாஸ்போர்ட் பிரச்சினையைக் கையிலெடுக்கும் 'காக்கா முட்டை' மணிகண்டன்

பாஸ்போர்ட் பிரச்சினையைக் கையிலெடுக்கும் 'காக்கா முட்டை' மணிகண்டன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஸ்போர்ட் விஷயங்களில் உள்ள முரண்பாடுகளை மையமாகக் கொண்டு, விஜய் சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை' உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

'காக்கா முட்டை' மணிகண்டன் விஜய் சேதுபதி- ரித்திகா சிங்கை வைத்து 'ஆண்டவன் கட்டளை' படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் படத்தின் கதைக்களம் தற்போது வெளியாகியிருக்கிறது.


Aandavan Kattalai Story Line Revealed

இதுகுறித்து படக்குழு ''பாஸ்போர்ட் வழங்கும் விஷயங்களில் உள்ள முரண்பாடுகள், அதனால் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.


பாஸ்போர்ட் விஷயத்தை கையிலெடுத்திருப்பதால் சீரியஸ் படம் என்று எண்ணிவிட வேண்டாம். பொழுதுபோக்கு அம்சங்களுடன் எல்லோரையும் கவர்கின்ற படமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளனர்.


'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை' என 2 படங்களுக்குப் பின் மணிகண்டன் இயக்கும் படம், விஜய் சேதுபதி, ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பது போன்ற காரணங்களால் இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மறுபுறம் மக்கள் செல்வன் என்ற அடைமொழியோடு விஜய் சேதுபதியின் 'றெக்க' பர்ஸ்ட் லுக் நாளை வெளியாவது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Sethupathi's Aantavan Kattalai Story Line now Revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil