மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மாமியார் ஜெயா பச்சன் அருகில் செல்லவிடாமல் தனது மகளை பார்த்துக் கொள்கிறாராம்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை என்று பலகாலமாக கூறப்படுகிறது. தன் விஷயத்தில் ஜெயா பச்சன் மூக்கை நுழைப்பது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லையாம்.
இந்நிலையில் தன் மகள் ஆராத்யாவை பாட்டி ஜெயா அருகிலேயே விடுவது இல்லையாம் ஐஸ்.
ஐஸ்வர்யா
ஆராத்யா ஜெயா பச்சனுடன் இருக்கும் ஒரு புகைப்படம் கூட இல்லை. ஆனால் அமிதாப் பச்சனுடன் இருக்கும் புகைப்படங்கள் ஏராளம் உண்டு. இதற்கு ஐஸ்வர்யா தான் காரணமாம்.
ஆராத்யா
ஐஸ்வர்யா வீட்டில் இருந்தால் அவர் தான் ஆராத்யாவை பார்த்துக் கொள்வார். ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் தனது அம்மாவை அழைப்பாரே தவிர மாமியாரை கூப்பிட மாட்டார் என்று குடும்ப நண்பர் ஒருவர் பிரபல ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
பொது இடங்கள்
வீட்டில் ஆராத்யா ஜெயா பச்சனுடன் நேரம் செலவிட அனுமதிக்க மாட்டாராம் ஐஸ்வர்யா ராய். மேலும் பொது இடங்களிலும் ஆராத்யாவை ஜெயா பச்சன் அருகில் கூட அனுப்ப மாட்டாராம்.
தைமூர்
ஐஸ்வர்யா ராயை போன்றே பாலிவுட் நடிகை கரீனா கபூரும் தனது மகன் தைமூர் அலி கானை தனது தாய் பபிதாவுடன் இருக்க அனுமதிக்கிறார். ஆனால் மாமியார் ஷர்மிளாவுடன் நேரம் செலவிட அனுமதிப்பது இல்லை.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.