»   »  அருள்நிதியின் 'ஆறாது சினம்' திரில்லர்...பாராட்டும் ரசிகர்கள்

அருள்நிதியின் 'ஆறாது சினம்' திரில்லர்...பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் ஆறாது சினம்.

ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் முதன்முதலாக, மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த மெமரிஸ் படத்தை தமிழில் ரீமேக்கியிருக்கிறார்.


இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இப்படத்தில் அருள்நிதியின் போலீஸ் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதைப் பார்க்கலாம்.


பாண்டிராஜ்

"ஆறாது சினம் பார்த்தேன். மவுனகுரு, டிமாண்டி காலனி போல இப்படமும் அருள்நிதி வாழ்வில் ஒரு சிறந்த படமாக இருக்கும்" என்று பாராட்டி இருக்கிறார் அருள்நிதியை நாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாண்டிராஜ்.


குடிகாரனாக

"ஆறாது சினம் முதல் பாதியில் அருள்நிதி குடிகாரனாக மிகச்சிறந்த நடிப்பை அளித்திருக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு ஈர்க்கிறது" என்று பாராட்டியிருக்கிறார் சதீஷ்.


உதயம் தியேட்டரில்

ஆறாது சினம் படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க வந்த அருள்நிதியை ரசிகர்கள் வரவேற்று அழைத்துச் செல்லும் காட்சியை மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் கதிரவன்.


முதல் பாதி

"ஆறாது சினம் இடைவேளை. திரில்லான 2 வது பாதிக்காக காத்திருக்கிறேன்" என்று ஹரிசரண் ட்வீட்டியிருக்கிறார்.


மொத்தத்தில் டிமாண்டி காலனி போல ஆறாது சினமும் அருள்நிதிக்கு வெற்றியை அளிக்கும், என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.English summary
Arulnithi, Aishwarya Rajesh Starrer Aarathu Sinam Released Today Worldwide, Written & Directed by Arivazhagan - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil