»   »  கமலின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் ஆரவ்... ஓவியாவுக்கு இன்று நியாயம் கிடைக்கும்?

கமலின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் ஆரவ்... ஓவியாவுக்கு இன்று நியாயம் கிடைக்கும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுடனான காதல் குறித்து கமலின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் ஆரவ் திணறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் விரும்பப்பட்ட ஓவியா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது முதல் காரணம் ஆரவ்வுடனான காதல்தான் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே ஓவியாவும், ஆரவும் பழகி வருகின்றனர்.

Aarav cannot deal several question by Kamal about Oviya

ஓவியா ஏதேனும் தவறு செய்தாலோ, கோபப்பட்டாளோ ஆரவ் அவரை சமாதானம் செய்வார். கடந்த சில தினங்களாக ஆரவ், ஓவியாவிடம் தான் காதலிக்கவில்லை என்று கூறியதோடு அவருடனான பழக்கத்தையும் துண்டித்துவிட்டார்.

ஆனால் காயத்ரி, ஜூலி ஆகியோருடன் ஆரவ் பழகியது ஓவியாவுக்கு மன உளைச்சலை உண்டாக்கியது. இதனால் பெரிய களேபரங்களுக்கு மத்தியில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் ஓவியா. இதற்கு சமூகவலைதளங்களில் கமலுக்கு எதிராக கருத்து தெரிவித்து ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.

இதனால் உள்ளே நடப்பது குறித்து தனித்தனியாக கமல் நேற்று முதல் விசாரணை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று ஆரவ்விடம் விசாரணை நடத்துவது போன்ற ப்ரோமோ வெளியானது. அதில் கமல், ஓவியா குறித்து கேட்கும் கேள்விகளை ஆரவ் எதிர்கொள்ள முடியாமல் திணறுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் ஓவியாவுக்கு இன்றைய நிகழ்ச்சியில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Kamal asked several questions about Oviya to Aarav, for that he cannot face. Today promo reveals that justice for Oviya?
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil