»   »  பிக் பாஸ் வீட்டில் ஆரவுக்கு சுத்தமாக பிடிக்காத நபர் யார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் ஆரவுக்கு சுத்தமாக பிடிக்காத நபர் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும் என்று அடம் பிடிக்க மாட்டேன் என ஆரவ் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவுக்கு பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்புகள் வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் வாழ்க்கை இப்படி மாறும் என தான் எதிர்பார்க்கவே இல்லை என்கிறார் ஆரவ்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வருகிறது. சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துவிட்டு கதை கேட்க திட்டமிட்டுள்ளேன்.

நல்ல படங்கள்

நல்ல படங்கள்

நான் நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லை. அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக உள்ளேன். ஆனால் நல்ல கதையாக இருக்க வேண்டும்.

சுஜா

சுஜா

பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களில் சூஜா வருணியை எனக்கு சுத்தமாக பிடிக்காது. எப்பொழுதுமே போலியாக இருந்தார். அவர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை.

கமல்

கமல்

தான் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து செய்கிறார் கமல். அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். நம் மாநிலம் மோசமான நிலையில் உள்ளது. நல்ல தலைவர் தேவைப்படுகிறார். நாம் எதிர்பார்க்கும் மாற்றமாக கமல் சார் இருக்கலாம் என்றார் ஆரவ்.

English summary
Bigg Boss title winner Aarav is getting calls from big directors and production houses. He is open to all types of roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil