ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் ஓவியா... வைரலாகும் செல்ஃபி போட்டோ!
Recommended Video

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியா ராகவா லாரன்ஸுடன் 'காஞ்சனா 3', விமலுடன் 'களவாணி 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றபோது ஆரவ் மீது காதல் கொண்டிருந்தவர், அவர் காதலிக்க மறுத்ததால் தற்கொலைக்கு முயற்சித்து கடைசியில் அங்கிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், ஓவியா, ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் செல்ஃபி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் ஆதரவு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஓவியா பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் என்ன செய்தாலும் ரசிகர்கள் வெகுவாகப் புகழ்ந்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என ஒப்பந்தமானார்.

ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியா, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'காஞ்சனா 3', சற்குணம் இயக்கும் 'களவாணி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து 'குளிர் 100 டிகிரி' படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் உருவாக உள்ள '90 ml' படத்தில் நடிக்கிறார்.

ஆரவ்வை காதலித்த ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியா, ஆரவ்வை காதலித்தார். ஆனால் ஆரவ் அவரது காதலை ஏற்க மறுத்ததால் தற்கொலை முயற்சி வரை சென்றது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் மன அழுத்தம் அதிகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார் ஓவியா.

நெருக்கமாக இருக்கும் ஓவியா ஆரவ்
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் ஓவியா மற்றும் ஆரவ் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படத்தை ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

செம வைரல்
ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் ஓவியாவின் புகைப்படம் ஓவியா ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்பே ஆரவ் ஓவியாவை தனியாக சந்தித்து வெளியே செல்லவேண்டும் என்று கூறினார். அதற்காக இவர்கள் இருவரும் சந்தித்தித்திருப்பார்களோ என சமூக வலைதளங்களில் விவாதித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











