»   »  அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்: ஆரவ் ஹேப்பி அண்ணாச்சி

அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்: ஆரவ் ஹேப்பி அண்ணாச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது! - நடிகர் வேதனை- வீடியோ

சென்னை: சமீர் பரத் ராம் இயக்கும் காதல் படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். அதிலும் குறிப்பாக ஓவியா அவரை காதலித்ததால் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

மாடலாக இரு்த ஆரவ் தற்போது ஹீரோவாகிவிட்டார்.

ஆரவ்

ஆரவ்

சிலம்பாட்டம் சரவணன் இயக்கும் படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் அவர் மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

காதல் கதை

காதல் கதை

இயக்குனரும், தயாரிப்பாளருமான சமீர் பரத் ராமின் படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்க உள்ளார். காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் குறும்படமான மீண்டும் ஒரு புன்னகையை தான் சமீர் முழு நீள படமாக இயக்குகிறார்.

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

சமீர் இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோயின்களாம். திரைக்கதையை மணிகண்டன் எழுத, வசனங்களை நலன் குமாரசாமி எழுதுகிறார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறது.

English summary
Aarav has signed a movie with Director and producer Sameer Bharath Ram. The movie has two heroines and the shooting will commence next year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X