»   »  பொய் சொன்ன ஆரவின் முகத்திரையை கிழித்த கமல் ஹாஸன்

பொய் சொன்ன ஆரவின் முகத்திரையை கிழித்த கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொய் சொன்ன ஆரவின் முகத்திரையை கிழித்துள்ளார் கமல் ஹாஸன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஆரவின் குறும்படம் போடப்படும் என்று விளம்பரம் செய்தனர். இதையடுத்து அந்த குறும்படத்தை பார்க்க ஓவியா ஆர்மிக்காரர்கள் ஆவலாக இருந்தனர்.

சொன்னபடியே குறும்படம் போட்டு காண்பிக்கப்பட்டது.

சினேகன்

சினேகன்

கவிஞர் சினேகனிடம் தான் மன்னிப்பு கேட்டதாகவும், அதை மக்களுக்கு காட்டவில்லை என்றும் ஆரவ் கமல் ஹாஸனிடம் தெரிவித்தார். பொறுமையாக கேட்ட கமல் குறும்படத்தை போட்டுக் காட்டினார்.

குறும்படம்

குறும்படம்

குறும்படத்தில் சினேகன் ஆரவிடம் மன்னிப்பு கேட்கிறார். பாலிடிக்ஸ் என்ற வார்த்தையை எப்படி நீங்கள் பயன்படுத்தலாம் என்று ஆரவ் மீண்டும் மீண்டும் சினேகனிடம் தெரிவித்தார்.

அழுகை

அழுகை

தம்பி என்று நினைத்து உரிமையில் உன்னிடம் பேசிவிட்டேன். இனிமேல் பாசமாக யாருடனும் பேச மாட்டேன், சாரி என்று கூறி சினேகன் கண் கலங்கினார்.

ஆரவ்

ஆரவ்

சினேகன் பேசிய பிறகு ஆரவ் காயத்ரி, ரைசாவுடன் அமர்ந்து பேசும் காட்சி காண்பிக்கப்பட்டது. அப்பொழுது தான் சினேகனிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று ஆரவ் அவர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் அவரது முகத்திரை கிழிந்துவிட்டது.

கமல்

கமல்

குறும்படத்தை பார்த்த ஆரவ் தான் பொய் சொல்லவில்லை என்று சப்பை கட்டுகட்டினார். கமலோ பார்வையாளர்களிடம் இது பொய்யா இல்லையா என்று கேட்க அவர்கள் பொய் என்று சப்தமாக கூறினர்.

English summary
Kamal Haasan has exposed the true colour of Maruthuva Mutham fame Big Boss contestant Aarav.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X