எனக்கு யாரு கிஃப்ட் தரப்போறா.. தினமும் துப்பாக்கியை வச்சி சுட்டுக்கிட்டு இருக்கேன்.. புலம்பிய ஆரி!

சென்னை: ஆரி தனக்கு யாரும் கிஃப்ட் தர மாட்டாங்க என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஆரிக்கு கிஃப்ட் கிடைத்ததும் ரொம்பவே ஃபீல் பண்ணி பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Recommended Video

Bigg Boss Archana twitterல் வெளியேறினார் | Love -Hate வேண்டாம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்கும் மற்ற போட்டியாளர்கள் சீக்ரெட்டாக ஒரு பரிசை கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் கூற போட்டியாளர்களும் தங்களிடம் இருந்த பொருட்களை மற்றவர்களுக்காக கொடுத்தனர்.

ஆரிக்கு அனிதா என்ன மாதிரியான கிஃப்ட் கொடுத்தார் என்பது தான் இதில் ட்விஸ்ட்டே!

சர்ப்ரைஸ் கிஃப்ட்

சர்ப்ரைஸ் கிஃப்ட்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்கும் மற்ற போட்டியாளர்கள் சீக்ரெட்டாக ஒரு பரிசை கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் உத்தரவு போட போட்டியாளர்களும் தங்களிடம் இருக்கும் சாதாரண பொருட்களையும் உடைகளையும் மற்றவர்களுக்காக கொடுத்தனர்.

ரம்யாவின் பரந்த மனசு

ரம்யாவின் பரந்த மனசு

பாலாஜி முருகதாஸ் ஷிவானிக்கு கிஃப்ட் கொடுக்காமல் சோமசேகருக்கு கிஃப்ட் கொடுத்த நிலையில், ரம்யா பாண்டியன் அனிதாவுக்கு கிஃப்ட் கொடுத்தார். அனிதாவுக்கு யாராவது கிஃப்ட் கொடுத்து, ஷிவானிக்கு கிஃப்ட் வரவில்லை என்றால், இந்த கிஃப்ட்டை ஷிவானிக்கு கொடுத்துடுங்க பிக் பாஸ் என்கிற கோரிக்கையும் வைக்க, அவர் நினைத்தது போலவே ஷிவானிக்கு யாருமே கிஃப்ட் தரவில்லை. ரம்யாவின் கிஃப்ட் ஷிவானிக்கு சென்றது.

துப்பாக்கியால் சுடுறேன்

துப்பாக்கியால் சுடுறேன்

எல்லா போட்டியாளர்களுக்கும் கிஃப்ட் கிடைத்ததை போலவே ஆரிக்கும் ஒரு கிஃப்ட் கிடைத்ததும் மனுஷன் ரொம்பவே ஃபீல் பண்ணிட்டார். எனக்கெல்லாம் யாரு கிஃப்ட் கொடுக்கப் போறான்னு நினைச்சேன். அந்த அளவுக்கு நாம ஒண்ணுமே பண்ணலையே.. தினமும் காலையில இருந்து நைட் வரைக்கும் துப்பாக்கியை எடுத்து ஒவ்வொருத்தரையும் சுட்டுக்கிட்டுத் தானே இருக்கேன் என புலம்பினார் ஆரி.

துணி துவைக்கும் பிரஷ்

துணி துவைக்கும் பிரஷ்

அப்படி ஃபீல் பண்ண ஆரிக்கு, அனிதா சம்பத் என்ன கிஃப்ட் கொடுத்தாரு தெரியுமா? துணி துவைக்கும் பிரஷ் மற்றும் காது குடையும் பட்ஸை ஆரிக்கு கொடுத்தார். அதற்கு அவர் கொடுத்த அடடே விளக்கம் தான் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது. இருவருக்கும் இடையே பிரச்சனைகளை கறை போல துவைத்து எடுக்க அந்த பிரஷ் உதவுமாம். லேஸா காது குடைஞ்சா போதும், உள்ளே அழுத்தி குடைஞ்சா ரணமாகிடும் என உள் அர்த்தத்துடன் கிஃப்ட் கொடுத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X