For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சம்யுக்தாவுக்கு நீ வக்காளத்து வாங்காத.. பாலாவுக்கு மரண அடி கொடுத்த ஆரி.. விட்டா அடிச்சிடுவாரு போல!

  |

  சென்னை: வளர்ப்பு சரியில்லை என்பதற்கு, அப்படியொரு வளர்ப்பு என்பதற்கும் வேறு வேறு பொருள் இல்லை என்பதை சம்யுக்தா எப்போதான் புரிஞ்சிக்கப் போறாங்கன்னு தெரியல..

  ஆரம்பத்தில் இருந்தே ஆரியை அவன் இவன் என ஒருமையில் பேசி வரும் சம்யுக்தா, என் தாய்மையை பற்றி அவன் எப்படி பேசுவான் என பிரச்சனையை கிளப்பினார்.

  சம்யுக்தாவுக்கு சப்போர்ட் பண்ணி பேச வந்த பாலாவை, அவங்களுக்காக நீ வக்காளத்து வாங்க வராத என மரண அடி கொடுத்தார் ஆரி.

  உச்சகட்ட சண்டை

  உச்சகட்ட சண்டை

  பிக் பாஸ் வீடு ரசிகர்கள் எதிர்பார்த்தது போல, சண்டைக் காடாகவே மாறி விட்டது. நேத்து ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ரவுண்டு கட்டி பாலாவை வச்சு செய்தனர். இதற்காக, தனியாக கன்ஃபெஷன் ரூமில் சென்று பாலா கதறி அழுதாலும் ஆச்சர்யப்படுவதற்கு அல்ல, முதல் நாளே காலை தூக்கி பேசுவேன் என பாலா பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

  சம்யுக்தாவுக்கு சப்பைக்கட்டு

  சம்யுக்தாவுக்கு சப்பைக்கட்டு

  'கலீஜ்' என்கிற வார்த்தையை சனம் ஷெட்டிக்கு எதிராக பயன்படுத்திய டம்மி மம்மி சம்யுக்தா, 'வளர்ப்பு' என்கிற வார்த்தையை ஆரிக்கு எதிராக பயன்படுத்தி பிரச்சனையை ஆரம்பித்து வைத்தார். தெனாவட்டு, திமிருத்தனமாக கால்சென்டர் டாஸ்க்கில் பேசிய சம்யுக்தாவுக்கு, ஆரியுடன் சண்டை வெடிக்க, உடனே ஓடி வந்த பாலா சப்போர்ட் பண்ணுவது போல சப்பைக்கட்டு கட்டினார்.

  சூப்பர் ஜோடி

  சூப்பர் ஜோடி

  சமீபத்தில் தான் ஹுண்டாய் கார் டாஸ்க்கில் ஆரியையும், சம்யுக்தாவையும் ஜோடியாக்கி அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்க நினைத்த பிக் பாஸ், மறுபடியும் இருவருக்குமிடையே சண்டையை கோர்த்து விட்டுள்ளார். சூப்பர் ஜோடியாக பரிசு வென்ற ஆரியும், சம்யுக்தாவும் நேற்றைய எபிசோடில் சண்டை போட்டுக் கொண்டது பல எல்லைகளை அசால்ட்டாக கடந்து போனது.

  நீங்க சொல்லவே இல்லை

  நீங்க சொல்லவே இல்லை

  அந்த வார்த்தையை நீங்க சொல்லவே இல்லை. அவர் வேண்டுமென்றே வம்பிழுக்கிறார் வந்துடுங்க போலாம் என சம்யுக்தாவை அர்ச்சனா கேங்கில் இருந்து மறுபடியும் தன்னுடைய கேங்கிற்கே இழுத்துச் சென்றார் பாலா. சம்யுக்தாவுக்கு சப்போர்ட் பண்ணி அர்ச்சனா ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  வக்காளத்து வாங்காத

  வக்காளத்து வாங்காத

  பாலா உள்ளே நுழைந்து சம்யுக்தாவுக்கு ஆதரவாக பேசுவது போல, ஆரிக்கும் தனக்கும் இடையேயான பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்ததும், சம்யுக்தாவுக்காக நீ வக்காளத்து வாங்க வராத என எச்சரித்தார். மத்தவங்களுக்காக நீங்க பேச வராதீங்க என என்னை சொல்லிட்டு, நீ மட்டும் ஏன் தம்பி வர என வச்சு செய்தார்.

  கத்தி பேசாதீங்க

  கத்தி பேசாதீங்க

  கையை நீட்டி பேசாதீங்கன்னு சம்யுக்தாவும், கத்தி பேசாதீங்கன்னு பாலாவும் ஆரியை பார்த்து அரண்டு போய் அடக்கமாக பேச ஆரம்பித்தனர். நான் எப்படி பேசணும், எதை பேசணும்னுலாம் நீ சொல்லாத, நீ உன் வேலையை பாரு, மத்தவங்க பிரச்சனையில தேவையில்லாம தலையிடாத, நீ எப்படிலாம் அவங்களுக்கு எடுத்துக் கொடுத்தன்னு, டிவியில காட்டிட்டாங்க, சும்மா நடிக்காத என மரண அடி கொடுத்தார்.

  பாலாவுக்கு ஃபியூஸ் போயிடுச்சு

  பாலாவுக்கு ஃபியூஸ் போயிடுச்சு

  சோமசேகர், ரியோ ராஜ், அர்ச்சனா, கேபி மற்றும் கடைசியாக ஆரி என 5 பேர் மாத்தி மாத்தி நேற்றைய எபிசோடில் பாலாவை போட்டு துவை துவைன்னு துவைத்தனர். ஒரு கட்டத்துக்கு மேல கேமராவை பார்த்து, ஆள விடுங்கடா சாமி என கதற ஆரம்பித்து விட்டார். பாலாவுக்கு சுத்தமா ஃபியூஸ் போயிடுச்சு என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

  ஆரிக்கு பெருகும் ஆதரவு

  ஆரிக்கு பெருகும் ஆதரவு

  சமூக வலைதளங்களில் நடிகர் ஆரி அர்ஜுனாவுக்குத் தான் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நீங்க ரொம்ப நல்லவரா நடிக்கிறீங்க, நீங்க மட்டும் தான் கேம் ஆடணும், நாங்கலாம் வீட்டுக்கு போகணும் என ஏகப்பட்ட வார்த்தைகளை விட்ட பாலாவுக்கு எதிராகவும், ஆரிக்கு சப்போர்ட் பண்ணியும் பிக் பாஸ் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

  டைட்டிலுக்கு தகுதியானவர்

  டைட்டிலுக்கு தகுதியானவர்

  அர்ச்சனா அண்ட் கோவின் வேல் கேங்கிலும், பாலா கேங்கிலும் சேராத நபராக ஆரி தனித்துவமாக இயங்கி வருகிறார் என்றும், தெளிவான விஷயங்களையும், முறையான கேமையும் விளையாடி வரும் ஆரி தான் இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஆரிக்கு கொடுக்காமல் விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளுக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

  English summary
  Aari clash with Samyuktha over her grown statement against Aari. Balaji lends his support on Samyuktha, Actor Aari warns Bala don’t interfere with this issue.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X