For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ !

  |

  சென்னை: பாலாவையும் ஷிவானியையும் மட்டுமே ஃபோகஸ் பண்ணி ஆரி விளையாடுகிறாரோ என்கிற எண்ணமே ஏகப்பட்ட ரசிகர்களுக்கு வந்து விட்டது.

  பாலாவை டார்கெட் பண்ண ஆரிக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லையா? என்றும், ஷிவானியிடம் கொஞ்சம் அவர் வழிகிற மாதிரி தெரியுதே என்றும் சமூக வலைதளத்தில் இன்றைய ஷோவை பார்த்த ரசிகர்கள் பதிவிட ஆரம்பித்து விட்டனர்.

  இந்நேரம் பாலா அல்லது சம்யுக்தாவாக இருந்திருந்தால் இவ்வளவு ஸ்வீட்டா கேள்வி கேட்டு இருக்கமாட்டார் என்கிற குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகின்றன.

  நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ!

  காதல் இல்லை

  காதல் இல்லை

  பாலா மீது நீங்க வைத்திருப்பது அன்பா? காதலா? எனக் ஆரி கேட்டதற்கே, நட்பா? காதலா? எனக் கேட்டு இருக்கலாம் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்தன. ஆனால், காதல் இல்லை என்பதை ஷிவானியின் வாயால் தெளிவு படுத்த வேண்டும் என ஆரி பண்ண மூவ் சூப்பர் என்றும் அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

  பார்த்தா அப்படி தெரியலையே

  பார்த்தா அப்படி தெரியலையே

  கண்ணால் காண்பதும் பொய், பிக் பாஸ் எடிட்டர் போடும் லவ் தீம் மியூஸிக்கை காதால் கேட்பதுவும் பொய், பாலாவும் ஷிவானியும் சொல்வதே மெய் என்கிற ரேஞ்சுக்கு அவர்களது உறவு பிக் பாஸ் வீட்டில் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. காதல் இல்லை என ஷிவானி சொன்னாலும், பார்த்தா அப்படி தெரியலையே என்று தான் இன்னமும் நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

  ரொம்ப சாஃப்ட்டா

  ரொம்ப சாஃப்ட்டா

  வேற வழியே இல்லாமல் உங்களுக்கு கால் பண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என சொல்லி ஷிவானிக்கு போன் பண்ணி பேசிய ஆரி, நீங்க அதிக நேரம் யாருடன் நேரத்தை செலவழிக்கிறீங்க என்கிற கிடுக்கிப்பிடி கேள்வியை ரொம்பவே சாஃப்ட்டாக கேட்டார். அது மட்டுமின்றி, உங்களுக்கும் பாலாவுக்கும் இருக்கும் உறவு என்ன? என கேட்காமல், அன்பா? காதலா? என்றும் ஈசியா பதில் சொல்லும் படியே கேட்டுவிட்டார்.

  மழுப்பிய ஷிவானி

  மழுப்பிய ஷிவானி

  ஆரியின் கேள்விக்கு பதில் சொன்ன ஷிவானி, தான் இந்த வீட்டில் அதிக நேரம் சம்யுக்தாவுடன் தான் செலவு செய்கிறேன் என்று வாய்க்கூசாமல் முதலில் பொய் சொல்லிவிட்டு, அதன் பிறகு, ஆஜீத் பெயரை சொல்லிவிட்டு, கடைசியா பாலாஜி முருகதாஸ் பெயரையும் வேற வழியில்லாமல் சொன்னார்.

  பதறிய பாலா

  பதறிய பாலா

  ஷிவானிகிட்ட ஆரி அர்ஜுனன் எந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டு டார்ச்சர் பண்றாரோ என ரொம்பவே பதறி போனார் பாலா. எங்களுக்குள் காதல் இல்லை வெறும் அன்பு தான் என ஷிவான் வாயால் ஆரி சொல்ல வைக்கும் போது, பாலாவின் ரியாக்‌ஷன் எல்லாம் வேற லெவல்.

  கொஞ்சம் வழியுறாரோ

  கொஞ்சம் வழியுறாரோ

  சனம் ஷெட்டி, சம்யுக்தாவை எல்லாம் விடாமல் வச்சி விளாசும் ஆரி, ஷிவானி நாராயணனிடம் மட்டும் ஏன் இவ்வளவு அமைதியாக பேசி, ஷிவானிக்கு கோபமே வராத அளவுக்கு கேள்விகளை கேட்டு அவரை காப்பாற்றினார் என்றும், கொஞ்சம் ஓவரத்தான் வழியுறாரோ மனுஷன் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

  அதுவும் ஒரு காரணம்

  அதுவும் ஒரு காரணம்

  ஆரம்பத்திலேயே ஷிவானிக்கு 2 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பேசியதால், அதை மனதில் வைத்துக் கொண்டு ஷிவானியை பகைத்துக் கொள்ளவில்லையோ என்று வேறு சில காரணங்களையும் அடுக்கி வருகின்றனர். ஆரியிடம் கடைசி வரைக்கும் பேசி போனை கட் பண்ணாத ஷிவானிக்கு ஆரி 4 ஸ்டார்களையும் கொடுத்தார்.

  English summary
  Aari Arjuna soft touch in phone conversation with Shivani Narayanan and let her won in that customer care task.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X