For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஃபினாலேவுக்கு முன்னாடி பாலா கிட்ட ஆரி சொன்ன ரகசியம்.. பிக் பாஸ் வீட்டில் செய்த மாற்றங்கள் என்ன?

  |

  சென்னை: கிராண்ட் ஃபினாலேவுக்கு முன்னாடி பாலாஜி முருகதாஸிடம் தனியாக ஆரி பேசிய ரகசியம் குறித்து தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஆரி.

  தனது நண்பரின் யூடியூப் சேனலான பேக்ஸ்டேஜ் யூடியூப் சேனலுக்கு ஆரி அர்ஜுனன் பேசிய பேட்டியின் மூன்றாவது பாகம் வெளியாகி உள்ளது.

  பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணியுள்ள ஆரி அந்த நிகழ்ச்சியே ஒரு குறை சொல்லும் நிகழ்ச்சி என்றும் கூறியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

  குறை சொல்லும் கேம்

  குறை சொல்லும் கேம்

  பிக் பாஸ் நிகழ்ச்சியே ஒரு குறை சொல்லும் நிகழ்ச்சி என்றும், எப்படி யார் என்ன குறை சொன்னாலும், தன்னிலை மாறாமல் விளையாடுபவரே வெற்றியாளர் என்பது தான் இந்த கேம் ஷோவின் சாராம்சம் என்பதை புரிந்து கொண்டு விளையாடியதாலேயே டைட்டிலை வின் பண்ணி உள்ளார் ஆரி அர்ஜுனன்.

  50 நாட்கள் ரம்யா

  50 நாட்கள் ரம்யா

  செடி வளர்த்து கின்னஸ் சாதனை செய்த நீங்கள், உள்ளே உங்களுக்கு கொடுத்த ஒரு செடியையே பார்த்து கொள்ளவில்லையே என்கிற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்றீங்க என்கிற கேள்விக்கு, வெளியே செய்த அதே வேலையை உள்ளே செய்வது எனக்கு ஈஸியான ஒன்று தான். ஆனால், மத்தவங்களும் அதை செய்ய வேண்டும் என்று நினைத்தே வேடிக்கை பார்த்தேன். ரம்யா பாண்டியன் முதல் 50 நாட்கள் அதனை கண்ணும் கருத்துமாக பார்த்தார்.

  மற்றவர்களும் மாறினர்

  மற்றவர்களும் மாறினர்

  அதற்கு அடுத்து கமல் சார் சொன்ன பிறகு நானும் ரம்யாவும் சேர்ந்தே செடிகளை பார்த்துக் கொண்டோம். ஆனால், எங்களுக்கு மட்டுமே அந்த கிரெடிட் கிடைக்கக் கூடாது என நினைத்து, அனைவரையும் செடிகளை பார்த்துக் கொள்ள வைத்தோம். அந்த மாற்றத்தை பிக் பாஸ் வீட்டில் செய்து காட்டியது எனக்கு சந்தோஷம் என்றார்.

  அர்ச்சனா புரிஞ்சுகிட்டாங்க

  அர்ச்சனா புரிஞ்சுகிட்டாங்க

  நல்லா சமையல் செய்ய தெரிஞ்சவங்களே தொடர்ந்து கிச்சன் டீமில் இருந்தால், அங்கே உள்ளவர்கள் எவிக்ட் ஆனால், சமைக்க தெரியாதவர்கள் கடைசியில் கஷ்டப்படுவார்கள் என்பதை வலியுறுத்தினேன். என்னோட கேப்டன்சியில் அது நடக்காமல் போனது. ஆனால், அதன் பிறகு வந்த ரியோ அதை புரிந்து கொண்டு அர்ச்சனாவிடம் எடுத்துக் கூற அர்ச்சனாவும் அதை புரிஞ்சிக்கிட்டாங்க, இருவருக்கும் என் பாராட்டுக்கள் என்றார்.

  பாலாவிடம் கடைசியாக

  பாலாவிடம் கடைசியாக

  உங்க கேம் முறை சரியில்லை என தொடர்ந்து பேசி வந்த பாலா தம்பியிடம், கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இருவரும் தனியாக இருந்த நேரத்தில் ஒரு விஷயம் சொன்னேன். கிறிஸ்துமஸ் வாரத்தின் முடிவில் அனைவரிடமும் பாலாவை பேச சொன்னதே நான் தான். நான் மட்டும் ஜெயிக்கணும்னு விளையாடியிருந்தா, என்னோட விளையாட்டு முறை தப்பா இருந்தா நான் ஏன் உன்னை எழுப்பி அங்க அப்படி பேச சொல்லணும்னு கேட்டேன். பாலா தம்பியும் அதை புரிஞ்சிக்கிடார்.

  ஜெயிக்க நினைக்கல

  ஜெயிக்க நினைக்கல

  நான் ஜெயிக்கணும்னு நினைக்கிறது ஓகே, நான் மட்டும் தான் ஜெயிக்கணும்னு நினைக்கிறது தப்பு இதைத்தான் எல்லார் கிட்டேயும் சொன்னேன். யாரையும் வெறுக்கல. மத்தவங்களும் கடைசி நேரத்தில் இதை புரிஞ்சிக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன். எல்லாரும் நல்ல பிளேயர்கள் தான் என ஆரி அர்ஜுனன் பேசியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

  சன்டேவுக்கு வெயிட்டிங்

  சன்டேவுக்கு வெயிட்டிங்

  பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே முடிந்த நிலையில், விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகவுள்ளது. ஆரி அர்ஜுனன் சும்மா புல்லட்டில் வேட்டி சட்டை அணிந்து கொண்டு என்ட்ரி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் லீக்காகி வைரலானது. ஒட்டுமொத்த போட்டியாளர்களின் கொண்டாட்டத்தையும் காண ரசிகர்கள் வெயிட்டிங்!

  English summary
  Aari Arjunan part 3 interview in backstage youtube channel reveals so many hidden secrets in Bigg Boss Tamil show.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X