Just In
- 14 min ago
வெட்கக்கேடு.. மசினக்குடியில் யானை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. சனம் ஷெட்டி கடும் கண்டனம்!
- 1 hr ago
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
- 2 hrs ago
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
- 2 hrs ago
ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ!
Don't Miss!
- Finance
Budget 2021.. டல்லடிக்கும் ரியல் எஸ்டேட் துறை.. ஊக்குவிக்க சலுகைகள் இருக்குமா?
- News
அதிகரித்த மாசு.. பெங்களூர் ஏரி நீரில் விளைவித்த காய்கறிகளில் அதிக அளவு உலோகங்கள்.. ஆய்வில் ஷாக்
- Automobiles
2020ஐஎன்டிஆர்சி போட்டியின் முடிவுகள்... இரு பிரிவுகளில் தங்கத்தை வென்ற அண்டை மாநில வீரர்.. யார் அவர் தெரியுமா?
- Education
இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சாப்பிட வேண்டிய பழங்கள்!
- Sports
பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்னா இதுதான்.. சட்டையை கழட்டி சுத்தம் செய்த ஆரி.. மீண்டும் கிடைத்தது பாராட்டு!
சென்னை: இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விளம்பரதாரரான டாபர் ஹெல்த் டூத் பேஸ்ட் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த வாரம் 7 பேர் உள்ள நிலையில், இந்த போட்டியில் பாலாவை நடுவராக்கி விட்டனர்.
ஆரி, சோம், ரம்யா ஒரு டீமிலும், ரியோ, கேபி மற்றும் ஷிவானி இன்னொரு டீமிலும் இடம்பெற்றனர்.
பாலாவுக்கு இதே பொழப்பா போச்சு.. முறைக்கிறது அப்புறம் மண்டியிடுறது.. வேற ஸ்க்ரிப்ட்டே இல்லையா பாஸ்?

டாபர் டூத் பேஸ்ட் டாஸ்க்
எப்போடா இந்த பிக் பாஸ் முடியும், இந்த விளம்பர டாஸ்க்குல இருந்து எஸ்கேப் ஆகலாம் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மறுபடியும் வச்சு செய்யும் விதமாக மீண்டும் ஒரு விளம்பர டாஸ்க்காக டாபர் ஹெல்த் டூத் பேஸ்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ராட்சத பல்
ஒரு பெரிய ராட்சத பல்லை கொடுத்து, அதில் உள்ள கறையை இரண்டு டீமாக பிரிந்து சுத்தம் செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. பாலா நடுவராக நியமிக்கப்பட்ட நிலையில், ஆரி, சோம், ரம்யா ஒரு டீமிலும், ரியோ, கேபி மற்றும் ஷிவானி இன்னொரு டீமிலும் இடம்பெற்றனர்.

போட்டிப் போட்டு
இரு அணிகளும் போட்டிப் போட்டு இந்த டாஸ்க்கை செய்தனர். உடனடியாக பரிசு கிடைத்து விடும் அல்லவா, அதுதான் அந்த ஆர்வம். இரு அணிகளும் கிட்டத்தட்ட அந்த ராட்சத பல்லை சுத்தம் செய்து முடிக்கும் நிலையில், பாலாவை மேலும் வில்லனாக்கும் முயற்சியில் நாரதர் பிக்பாஸ், இரு பல் மீதும் மேலும் கறையை கொட்டுமாறு பணித்தார். பாலாவும் அதை செவ்வனே செய்தார்.

சட்டையை கழட்டிய ஆரி
துடைக்க கொடுத்த டிஸ்யூ பேப்பரை எல்லாம் முன்னதாகவே காலி செய்து விட்ட நிலையில், எப்படி துடைக்கப் போகிறோம் என குழம்பிய நிலையில், சட்டென, டாபர் டூத் பேஸ்ட் கொடுத்த வெள்ளை நிற டி-சர்ட்டை கழட்டி ஆரி அந்த பல்லை துடைத்ததை பார்த்து ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஆச்சர்யப்பட்டு ராயல் சல்யூட் அடித்தனர்.

யார் வின்னர்
இதில் என்ன சந்தேகம், பாலாவுக்கு அதிகம் பிடித்த ஷிவானி, கேபி மற்றும் ரியோ இருக்கும் அணி தான் வெற்றி பெற்றது என பாலா தீர்ப்பு வழங்கி விட்டு, ரியோ, ஷிவானி மற்றும் கேபி அணியை வெற்றி பெற வைத்தார் என்று ஆரியின் ஆர்மியும், கொடுத்த பொருட்களை வைத்தே பல்லை சுத்தம் செய்ததால் தான் ரியோ டீம் வின் செய்தது என நெட்டிசன்களும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஆரியின் விளையாட்டை பாராட்டி ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் மீண்டும் ஒருமுறை அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

கமல் பாராட்டுவார்
இந்த வாரம் ஆரியிடம் ஏற்பட்ட ஏகப்பட்ட மாற்றங்களையும், குறிப்பா இந்த நிகழ்வையும் குறிப்பிட்டு இன்றைய எபிசோடில் கமல் பாராட்டுவார் என தெரிகிறது. ஷிவானியைத் தான் இந்த வாரம் வெளியே அனுப்ப போகிறார்கள் என்கிற தகவல் கசிந்துள்ள நிலையில், அடுத்த வாரம் பாலாவின் நிலை எப்படி இருக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!