For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உடம்பு சரியில்லை.. சீக்கிரம் உங்களை நேரில் வந்து பார்க்குறேன்.. ரசிகர்களுக்காக வீடியோ போட்ட ஆரி!

  |

  சென்னை: பிக் பாஸ் வெற்றிக்கு பிறகு மீடியாக்களுக்கு ஆரி அர்ஜுனன் பேட்டி கொடுக்காமல் அமைதியாக இருப்பதற்கான காரணத்தை தற்போது வீடியோ மூலம் கூறியுள்ளார்.

  Bigg Boss Aari Arjunan தன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஆரி 16 கோடி வாக்குகள் பெற்று பிக் பாஸ் தமிழ் 4 டைட்டிலை தட்டிச் சென்றார்.

  இனிமேலாவது மனுஷனா மாறுப்பா.. மிருக குணத்தை விடு.. டிவிட்டரில் பாலாஜியை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!

  ஆரியின் நேர்மையான விளையாட்டு மக்களுக்கு மிகவும் பிடிக்கவே அவருக்கு தினமும் எக்கச்சக்க ஓட்டுக்களை போட்டு வந்தனர்.

  ஓரங்கட்டப்பட்ட ஆரி

  ஓரங்கட்டப்பட்ட ஆரி

  மற்ற போட்டியாளர்கள் எல்லாம் குரூபிசம் மற்றும் ஃபேவரிசத்தால் ஒருங்கிணைந்து கும்பலாக பழகி கேமை விளையாடினார்கள். ஆனால், ஆரி இந்த கேமில் தனித் திறமையை காட்டுவதற்காக கொடுக்கப்பட்டது. இதை தனியாகத் தான் விளையாட வேண்டும் என நினைத்து பேசியதன் காரணமாக, ஆரியிடம் சாதாரணமாக கூட பேசுவதை பல போட்டியாளர்கள் தவிர்த்தனர்.

  சிலர் மட்டுமே

  சிலர் மட்டுமே

  ஆனால், ஆரியுடன் சிலர் மட்டுமே மனதில் எதையும் வைத்துக் கொள்ளாலம் சகஜமாக பழகினர். சனம் ஷெட்டி, அனிதா மற்றும் சோமசேகர் ஆரிக்கு நல்ல நண்பர்களாகவும், அதே சமயத்தில் போட்டி என்று வந்து விட்டால் ஆரிக்கு எதிராகவும் செயல்பட்டு விளையாடினர். ஆரியின் வெற்றியை கொண்டாடியதும் சனம் மற்றும் அனிதா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

  நன்றி தெரிவித்த ஆரி

  நன்றி தெரிவித்த ஆரி

  ஜனவரி 17ம் தேதி கிராண்ட் ஃபினாலே முடிந்த நிலையில், ஜனவரி 18ம் தேதி ஏகப்பட்ட திரை பிரபலங்களும் ஆரியை வாழ்த்தி ட்வீட் செய்தனர். ஆனால், நேற்று தான் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஆரி பதில் ட்வீட் போட்டார். இந்நிலையில், தற்போது ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ஆரி.

  ஏன் வரல

  ஏன் வரல

  வழக்கமாக வெளியே வரும் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஏகப்பட்ட மீடியாக்களுக்கு பேட்டி அளிப்பது வழக்கம். ஆனால், கிராண்ட் ஃபினாலேவில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களும், டைட்டில் வின்னரான ஆரியும் இன்னமும் மீடியா பக்கம் தலை காட்டவில்லை. 105 நாட்கள் உள்ளே இருந்ததும், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவும் ரெஸ்ட் எடுக்கவும் கொஞ்ச கால அவகாசம் அவர்களுக்கு தேவைப்படுவது இயல்புதான்.

  உடம்பு சரியில்லை

  இந்நிலையில், தற்போது வீடியோ வெளியிட்ட ஆரி, ஏகப்பட்ட ரசிகர்கள், அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், தங்கைகள் என பலரும் எனக்கு அன்பு செலுத்தி இருப்பதை அறிந்து ரொம்பவே சந்தோஷப்பட்டேன். டிக்கெட் டு ஃபினாலேவில் இருந்தே எனக்கு உடம்பு சரியில்லை. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, உங்களை எல்லாம் நேரில் சந்திக்க முயற்சிக்கிறேன் என ஆரி கூறியுள்ளார்.

  உங்களுடைய வெற்றி

  உங்களுடைய வெற்றி

  இது என்னுடைய வெற்றி அல்ல உங்களுடைய வெற்றி.. நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் கொடுத்த வெற்றி. அந்த வெற்றிக்காக என்றுமே நான் நன்றிக் கடன் பட்டு இருப்பேன் என்றும், சீக்கிரமே அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து தளங்களிலும் பதில் அளிக்க தயாராக உள்ளேன் என ஆரி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

  ரெஸ்ட் எடுங்க

  ரெஸ்ட் எடுங்க

  ஆரியின் இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், உடம்பை பார்த்துக்கோங்க அண்ணா, நீங்க நல்லா இருந்தாதான் நாங்க ஹேப்பியா இருப்போம். பேட்டியெல்லாம் பொறுமையா கொடுங்க, அவசரமே இல்லை, நல்லா ரெஸ்ட் எடுங்க, ரியா பாப்பாவோடு நேரத்தை செலவிடுங்க என வாழ்த்தி வருகின்றனர்.

  English summary
  Bigg Boss Title winner Aari Arjunan reveal the reason why he kept silent after Bigg Boss Grand Finale. He suffered little health issue after Ticket to Finale.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X