நல்லவனா இருந்தா நிச்சயம் பலன் கிடைக்கும்.. இந்தியளவில் குவிகிறது. ஆரிக்கு சப்போர்ட் #Aari

சென்னை: இந்த வாரம் எவிக்‌ஷனிலும் நிச்சயம் நடிகர் ஆரி காப்பாற்றப்படுவார் என்பது தெளிவாகி உள்ளது.

Recommended Video

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க நடந்த இன்ட்ரஸ்ட்டிங் சம்பவங்கள் | டாப் ஃபைவ் பீட்ஸ் - வீடியோ

அந்த அளவுக்கு நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து விட்டு சமூக வலைதளங்களில் நடிகர் ஆரிக்கு சப்போர்ட் குவிந்து வருகிறது.

பாலாஜி முருகதாஸையும் அர்ச்சனாவையும் எதிர்த்து பேசி தரமான சம்பவம் பண்ண காரணத்தால் #Aari இந்தியளவில் டிரெண்டாகி வருகிறார்.

ஆரிக்கு குவியும் ஆதரவு

நடிகர் ஆரி, பிக் பாஸ் வீட்டில் இன்றளவும் தான் ஒரு நேர்மையானவன், நல்லவன் என்பதை நிரூபித்து வருவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நான் போயிட்ட பிறகு, இவங்க யாருக்கு ஃபேவரிஸம் பண்ணுவாங்கன்னு சொல்லி அனைவரது முகத்திரையையும் கிழித்துத் தொங்கவிட்ட ஆரிக்கு எகிறுது சப்போர்ட்.

இந்தியளவில் டிரெண்டிங்

#Aari என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் பிக் பாஸ் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் ஆரி சொன்னதிலும், செய்ததிலும் எந்த ஒரு தப்பும் இல்லை என்றும், பாலாஜி முருகதாஸின் பச்சோந்தி தனத்தையும், அர்ச்சனா அண்ட் கோ பாலாவுக்கு பண்ண ஃபேவரிசத்தையும் பளிச்சென போட்டு உடைத்து விட்டார்.

நேர்மையானவர்

பிக் பாஸ் விளையாட்டில் யார் வேண்டுமானாலும், தங்கள் மனதுக்கு பிடித்த விளையாட்டை விளையாடலாம். ஆனால், யார் மனது எப்படி இருக்கிறது என்பதை மக்கள் பார்த்து அவர்களை வீட்டில் தங்க வைப்பதும், வெற்றி பெற வைப்பதையும் செய்து வருகின்றனர். ஆரி ரொம்பவே நேர்மையானவராக உள்ளார் என்பதே ஏகப்பட்ட மக்களின் கருத்து.

அவரை எப்படி போரிங்னு சொல்லலாம்

விஜயதசமிக்கு வீட்டுல வாழை மரம், தோரணம் கட்டுறதுல இருந்து சிவனாக நடித்தது வரை அத்தனை விஷயங்களை செய்த நடிகர் ஆரியை எப்படி போரிங் போட்டியாளர் என முடிவு கட்டலாம் என ஆரியின் ஆர்மியினர் கொந்தளித்து வருகின்றனர். நல்லது சொல்றதும், அட்வைஸ் பண்றதும் தப்பே இல்லை. ஆரி அவராகவே இருக்கிறார். நேர்மையான கேம் விளையாட வேண்டும் என எண்ணுவதில் தவறு இல்லை என்கின்றனர்.

நீ என் தம்பிடா

கூடிய சீக்கிரமே டிராமா குயினான அர்ச்சனா அக்கா, பாலாஜி முருகதாஸை தன் பக்கம் ஈர்த்தது போலவே ஆரியையும் ஈர்க்க, நீ என் தம்பி டா என பாசத்தை பொழிவது போல அழுது நாடகம் ஆடுவார் என்றும் ரசிகர்கள் மீம்களாக போட்டு வருகின்றனர். அர்ச்சனா அக்கா, ஆரியை அண்ணன் என்றே அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. நான் உன் தங்கச்சி அண்ணா என பிளேட்டை மாற்ற வாய்ப்பிருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X