»   »  ஆர்.கே. நகர் ரூ. 20க்கு ரூ.6,000 மேட்டரை மரண கலாய் கலாய்த்த நடிகர் ஆரி

ஆர்.கே. நகர் ரூ. 20க்கு ரூ.6,000 மேட்டரை மரண கலாய் கலாய்த்த நடிகர் ஆரி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆர்.கே. நகரில் ஓட்டு போடும் பாக்கியம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது - ஆரி- வீடியோ

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது 20 ரூபாய்க்கு ரூ. 6,000 என்று நடந்த பண வியாபாரம் குறித்து கலாய்த்துள்ளார் நடிகர் ஆரி.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் டிடிவி தினகரன் தரப்பு 20 ரூபாய் அளித்ததாக கூறப்படுகிறது.

தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் அந்த 20 ரூபாயில் இருக்கும் சீரியல் எண்ணை சொன்னால் ரூ.6,000 அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாம்.

வாக்குறுதி

வாக்குறுதி

தேர்தலில் அவர் வெற்றி பெற்றும் இன்னும் சொன்னபடி ரூ. 6 ஆயிரம் கிடைக்காமல் வாக்காளர்கள் கடுப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கலாய்

கலாய்

ஆறாம் திணை இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆரி ஆர்.கே. நகர் மேட்டரை கலாய்த்து பேசினார். ஆறாம் திணை நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடையும். ஆனால் ஆர்.கே. நகர் அளவுக்கு பெறுமா என்று கேட்காதீர்கள் என்றார்.

கடைகள்

கடைகள்

ஆர்.கே. நகரில் உள்ள கடைகளில் போய் 20 ரூபாய் நோட்டை கொடுத்தால் மிரள்கிறார்கள். ஆர்.கே. நகரில் ஓட்டு போடும் பாக்கியம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது என்றார் ஆரி.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு சென்றேன். பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் அத்தியாசிய தேவையை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுள்ளேன். இப்படி ஒவ்வொருவரும் உதவ முன்வந்தால் நன்றாக இருக்கும். கடலுக்கு செல்லும் மீனவர்களை கண்காணிக்க, காணாமல் போனால் தேடிக் கண்டுபிடிக்க வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இங்கேயும் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆரி கூறினார்.

Read more about: aari rk nagar ஆரி
English summary
Actor Aari has made fun of Rs. 20 dealing in RK Nagar bypoll at the audio launch of Aaram Thinai. Aari felt sad as he was not able to vote in the recently held RK Nagar bypoll.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X